உங்க இ.மெயில் பத்திரமா இருக்கா? செக் பண்ணுங்களேன்!
இணையதளப் பயன்பாடு இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இ.மெயில் என்பது அவசியமான ஒன்றாகிவிட்டதால் அதற்காக உருவாக்கும் மின்னஞ்சல் முகவரியும், பாஸ்வேர்டும் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும். இல்லையெனில் அதைவைத்து மோசடி செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
இது தொடர்பாகப் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் பலரும் பாதுகாப்பற்ற பாஸ்வேர்டுகளையே பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் பல பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளன.
2012ம் ஆண்டில் இதுவரை Hackers-களினால் திருடப்பட்ட மிகவும் மோசமான
25 பாஸ்வேர்டுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஸ்ப்லாஸ்டேடா இணையதளம் வெளியிட்டுள்ள மோசமான பாஸ்வேர்டுகள்:
123456, 12345678, abc123, qwerty, monkey, letmein, dragon,
111111, baseball, iloveyou, trustno1, 1234567, sunshine, master,
123123, welcome, shadow, ashley, football, jesus, michael, ninja,
mustang, password1
எனவே, இதுபோன்ற பாஸ்வேர்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம், மின்னஞ்சல் கணக்குகளை ஓரளவுக்கேனும் பாதுகாக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
நம் ஊர் இளைஞர்கள் பெரும்பாலும் காதலியின் பெயரையோ, அவர்களின் பிறந்தநாளையோதான் பாஸ்வேர்டாக பயன்படுத்துகின்றனர். எனவே அவை திருடப்பட வாய்ப்பே இல்லைதானே.
நன்றி, ஒன் இந்தியா, அக்டோபர், 30, 2012.,
0 comments:
Post a Comment
Kindly post a comment.