Sunday, October 21, 2012

சீனாவுடன் மீண்டும் போர் கிடையாது: அமைச்சர் அந்தோணி திட்டவட்டம்

போரில் உயிர்நீத்த வீரர்களைக் கெளரவிக்க 50 ஆண்டுகள் ஆயின , நமக்கு !





 புதுடில்லி : ""சீனாவுடன், 50 ஆண்டுகளுக்கு முன் நடந்தது போன்ற போர் மீண்டும் ஏற்படாது; இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகள் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்படும்,'' என, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறினார்.

அண்டை நாடான சீனாவுடன், 1962ம் ஆண்டு நடந்த போரில், இந்தியா தோல்வி அடைந்தது. அந்தப் போரில் இந்தியா, நிறைய இடங்களை சீனாவிடம் பறிகொடுத்தது. சீனப் போரின், 50வது நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. தலைநகர் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், போரில் உயிர்நீத்த வீரர்கள் மற்றும் உயிருடன் உள்ள வீரர்கள், முதல் முறையாகக் கவுரவிக்கப்பட்டனர்.

முன்னதாகப் போர் வீரர் நினைவிடமான, "அமர் ஜவான் ஜோதி'யில், மலர் வளையம் வைத்து வணங்கிய அமைச்சர் அந்தோணி, பின், நிருபர்களிடம் கூறியதாவது:இப்போது இருப்பது போல, இந்தியா, 50 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கவில்லை. தொடர்ந்து வந்த பல அரசுகள், ராணுவத்தைப் பலம் வாய்ந்ததாக ஆக்கியதால், எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில், ராணுவம் இப்போது விளங்குகிறது.

சீனா - இந்தியா இடையே, மீண்டும் ஒரு போர் ஏற்படாது. இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும். எவ்வித மிரட்டலையும் சமாளித்து, எல்லையை நம் வீரர்கள் பாதுகாப்பர். அதே நேரத்தில், ராணுவமும் பலம் வாய்ந்ததாக மாற்றப்படும். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்.இவ்வாறு, அமைச்சர் அந்தோணி பேசினார்.                                                                                    

நன்றி :- தினமலர், 21-10-2012




                          









0 comments:

Post a Comment

Kindly post a comment.