Sunday, October 21, 2012

சந்தேக இராமனின் சகாக்களே ! - ப.கவிதா குமார்

கல்லான அகலிகைக்கு
சாபவிமோசனம் கொடுத்த
இராமன்
கடலுக்குள் ஏன்
மணல் மேடானான் ?

கடற்கரையோர
பாலங்களை
அழித்து விளையாடுகிறது
பேரலை
கடலுக்குள் ஆழிப்பேரலை வந்தும்
எப்படி அப்படியே இருக்கும்
இராமர் பாலம் ?

திரைகடலோடி
திரவியம்
தேட முடியாது
தடுக்கிறது இராமர்பாலம்

தண்ணீருக்கு
மேலிருந்தால் பாலம்
தண்னீருக்கு
உள்ளிருந்தால் ?

இராமனின்
பாடரட்சை
பாரதம் ஆண்டதாக
பரப்பியவர்கள்
கடலுக்குள்
இராமர்பாலம் இருப்பதாகப்
பரப்புகிறார்கள்

கடலுக்குள் பாலமில்லையென
தீக்குளித்து நிரூபிக்க
“நாங்கள் சீதையல்ல “
சந்தேக இராமனின் சகாக்களே !

கவிதை ஆக்கம்- ப.கவிதா குமார்

நன்றி :- தீக்கதிர், 21-10-2012                                            

ராமர் பாலம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ( து.)  ( தா ? )
முதலில் அறிவியல் படித்தவர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு எத்தனை வருடங்களாக மனிதன் இருக்கிறான் என்பதற்கு விடை தெரிந்தால் இந்த கூற்று பொய்யென சுளீரென மண்டையில் உரைக்கும். அதையும் மறுத்து 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இருந்தார்கள் என்று இன்னும் நம்புபவர்கள், இதற்கு எதையேனும் ஆதாரமாக காட்டினால் உலகத்திற்கே அது பெரும் பரிசாக அமையும். உலகமே அவர்களை பாராட்டும். எவரேனும் செய்வார்களா என தெரியவில்லை... வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு நல்ல திட்டத்தை எதிர்க்கும் மதவாதிகளுக்கு அறிவியல் தெரிந்திருந்தும் இவ்வாறு கற்பனைகளைக் கூறுவது மத உணர்வுகளை தூண்டி ஆதாயமடைவதுவே அன்றி வேறில்லை...
இது இயற்கையாக அமைந்த பாலம் அல்ல. மனிதர்களால் கட்டப்பட்ட பாலமாகும். விஷ்ணு பகவானின் அவதாரமான ஸ்ரீராமரால் மட்டுமே இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க முடிந்தது.
இதற்கு நான் விளக்கமளிப்பதை விட அந்த புகைப்படத்தை எடுத்த நாசா விண்வெளி நிலைய அதிகாரி ஹெஸ் சொல்வதைக் கேட்போம்.

NASA said the mysterious bridge was nothing more than a 30 km long, naturally-occuring chain of sandbanks called Adam's bridge. Hess said his agency had been taking pictures of these shoals for years.
(ஆதாரம்: http://www.laputanlogic.com/articles/2002/11/03-83975630.php )

அவை வெறும் இயற்கையாகவே உருவான மணல்திட்டுகள் தாம் என நாசாவே சொன்ன பிறகும் அதை நம்பிக் கொண்டிருப்பது, “தான் பிடித்த முயலுக்கு மூணே கால்” என்று வாதிடும் சிறுபிள்ளைத்தனவாதமாகும். ஒருவேளை இதனையும் மறுப்போர் எனது முதல் கேள்விக்கான பதிலை பூர்த்தி செய்துவிட்டு இவற்றை திரும்ப படிக்கவும்.

There is no evidence of a human presence in the subcontinent, he says, before roughly 250,000 to 300,000 years ago. It is generally believed man's hominid ancestors did not leave their African home until about two million years ago
Communication experts say that false, suspect news finds much greater circulation than normal because of the internet.  


மேலும் விபரங்களுக்கு,

நன்றி :-                                                                                     

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3669:2010-02-18-07-04-38&catid=1:articles&Itemid=264                                               



0 comments:

Post a Comment

Kindly post a comment.