Thursday, October 18, 2012

பிரிட்டன் பெண் எழுத்தாளர் ஹிலாரிக்கு புக்கர் பரிசு




பிரிட்டனைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹிலாரி  மேன்டல் எழுதிய வரலாற்றுப் புதினத்துக்கு "மேன் புக்கர்' பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

÷காமன்வெல்த் நாடுகள் மற்றும் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் எழுதும் சிறந்த நாவலுக்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பரிசைப் பெறும் புத்தகம் லண்டனில் செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பிரிட்டனைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹிலாரி மேன்டல் எழுதியுள்ள "பிரிங் அப் தி பாடீஸ்' என்ற வரலாற்றுப் புதினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 1535ஆம் ஆண்டின் வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தைத் தேர்வு செய்த நடுவர் குழுவின் தலைவர் பீட்டர் ஸ்டோதார்டு கூறுகையில், ""ஹிலாரி மேண்டல், மிகச்சிறந்த நவீன ஆங்கில எழுத்தாளர். வரலாற்றுக் கதை எழுதும் முறையை அவர் மாற்றி அமைத்துள்ளார்'' என்றார்.

÷ஹிலாரி மேன்டலுக்கு, சுமார் ரூ.43 லட்சம் மதிப்புடைய புக்கர் பரிசு கிடைப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே அவர் எழுதிய "வோல்ஃப் ஹால்' புத்தகம் 2009ஆம் ஆண்டு இப்பரிசை வென்றது. இந்தப் புதினம், பிரிட்டனின் எட்டாவது ஹென்றி மன்னரின் அவையில் இடம்பெற்ற தாமஸ் க்ராம்வெல் என்பவரை கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

இரு முறை புக்கர் பரிசு வென்ற ஒரே பெண் எழுத்தாளர் ஹிலாரி மேன்டல் என்பது குறிப்பிடத்தக்கது. தனது நாவலுக்கு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், ""இப்பரிசுக்காக 20 ஆண்டுகள் காத்திருந்தால், ஒரே நேரத்தில் இரண்டு பரிசுகள் கிடைக்கும் போலிருக்கிறது'' என்று நகச்சுவையுடன் கருத்துத் தெரிவித்தார்.                                                 

நன்றி :- தினமணி, 18-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.