Thursday, October 18, 2012

48 மணி நேரத்தில் பருவ மழை தொடங்கும் !

தாழ்வு நிலையைக் காட்டும் செயற்கைக்கோள் வரைபடம்

வங்கக்க் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: 48 மணி நேரத்தில் பருவ மழை தொடங்கும்                                                                                                   

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை இயல்பைவிடக் குறைவாகப் பெய்தது. இருப்பினும் பருவ மழை காலம் முடியும் தருவாயில் தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது.

வடகிழக்குப் பருவ மழை இன்னமும் தொடங்காத நிலையில், இப்போது பெய்து வரும் இந்த மழையால் மாநிலத்தில் பல்வேறு நீர் ஆதாரங்கள் நிரம்பி வருகின்றன.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியது: காற்றுச் சுழற்சியின் காரணமாகக் கடந்த இரு தினங்களாக மழை பெய்துவருகிறது.

இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுதத் தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் கனமழை பெய்யும்.

இன்னும் 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

சென்னையை பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்றார் அவர்.

பதிவான மழை அளவு (புதன்கிழமை காலை நிலவரம் - செ.மீ.): பழனி - 9, பெரியகுளம் - 8, தாராபுரம் - 7, ராமநாதபுரம், கோவை, சூலூர் - 6.                                

நன்றி :- தினமணி, 18-10-2012





0 comments:

Post a Comment

Kindly post a comment.