விண்வெளி பல அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டது. இவற்றை ஆராய்வதற்காக உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் இரவு- பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதன்விளைவாகப் பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளில் மனிதம் வெற்றி பெற்றிருக்கின்றது. பூமியைத் தவிர மற்றக் கிரகங்களில் மனிதர்கள் வாழத்தகுதியான சூழ்நிலை நிலவுகிறதா என்பதை அறிய விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.
இதுகுறித்த ஒரு ஆய்வைச் செய்வதற்காகக் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அமெரிக்கா செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
இதேபோன்று, ஐரோப்பிய விஞ்ஞானிகளும் வெள்ளிக்கிரகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், வெள்ளிக்கிரகத்தில் பனிப்படலம் சூழ்ந்திருப்பது தற்போது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிரகம் சூரியனிலிருந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இது சூரியனைச் சுற்றிவர 224.7 நாட்கள் ஆகிறது.
வெள்ளிகிரகத்தின் மேற்பரப்பில் 125 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐஸ்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன. இதன்மூலம், இங்கு கார்பன்-டை-ஆக்ஸைடு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஐஸ் மற்றும் பனிக்கட்டிகளால் உறைந்திருப்பதால் அங்கு பூமியைவிட அதிக குளிர் நிலவுகிறது.
மேலும், சூரியனுக்குப் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பூமியின் பனிப்பிரதேசங்கள் வெப்பமயமாதலின் காரணமாக உருகிக் கொண்டிருக்கும் நிலையில், சூரியனுக்கு மிக அருகில் உள்ள வெள்ளியில் பனிக்கட்டிகள் உறைந்திருப்பது மிகவும் ஆச்சரியமானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவுக்கு அடுத்தபடியாக அதிக ஒளியைத் தரக்கூடியது வெள்ளிக்கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :- தீக்கதிர்
0 comments:
Post a Comment
Kindly post a comment.