Saturday, October 20, 2012

இலண்டனில் காற்று மூலம் பெட்ரோல் தயாரிப்பு





உலகின் முக்கியத் தேவையாகப் பெட்ரோல் உள்ளது. ஆனால் அதற்குரிய கச்சா எண்ணையின் அளவு பூமியில் குறைந்து கொண்டே வருகிறது. எனவே பெட்ரோலுக்கு மாற்று எரி பொருள் கண்டுபிடிக்கும் பல்வேறு முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காற்று மூலம் மின்சாரம் தயாரித்து இங்கிலாந்தின் ஒரு சிறிய நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இந்த பெட்ரோல் காற்று தொழில் நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. காற்றில் உள்ள கார்பன் -டை ஆக்சைடு எடுக்கப்படுகிறது. அத்துடன் ஹைட்ரஜன் கலந்து மெத்தனால் உருவாக்கப்படுகிறது. அதில் இருந்து பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. தற்போது இதுபோன்ற பெட்ரோலை 3 மாதத்தில் 5 லிட்டர் மட்டுமே தயாரிக்க முடிகிறது.

எனவே பெரிய அளவில் பிளாண்ட் அமைத்து அதன் மூலம் தினசரி டன் கணக்கில் பெட்ரோல் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். இதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் தயாரிக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்று மூலம் பெட்ரோல் தயாரிக்கும் தொழில் நுட்பம் சமீபத்தில் லண்டனில் நடந்த என்ஜினீயரிங் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது                                               

நன்றி :- மாலை மலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.