Sunday, October 28, 2012

கூகிள் வழங்கும் ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் சிறப்புப் பதிவு.!

வின்மணியார் 22-02-2012-லேயே எடுத்துரைத்த வழிகாட்டும் நெறிமுறைகள் :-  

http://winmani.wordpress.com/2012/02/22/google-to-know/

  பிப்ரவரி 22, 2012 at 1:18 பிப 1 மறுமொழி

இணையத்தில் உலாவரும் நமக்கு ஆன்லைன் மூலம் எப்படி எல்லாம் நம் தகவல்கள் திருடப்படுகின்றன , இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வரும் முன் காப்போம் என்ற நோக்கில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு தெளிவாகச் சொல்கிறது கூகிள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.




படம் 1
பல நேரங்களில் நம் இமெயில் மட்டுமின்றி இணையதளத்தின் தகவல்களும்  திருடப்படுகின்றன. எப்படி நம் தகவல்களை எடுக்கின்றனர் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த விடயம், பலருக்குப் புரியாமல் விளங்காமல் இருந்த இந்த கேள்விகள் அத்தனைக்கும் கூகிளே நேரடியாகப் பதில் சொல்கிறது.

இணையதள முகவரி : http://www.google.com/goodtoknow/

இணையத்தில் எப்படி நாம் தகவல்களைச் சேமிக்கிறோம், எங்கெல்லாம் தகவல்கள் எப்படி எல்லாம் பரிமாறப்படுகிறது என்பதைத் தெளிவாக அனைவருக்கும் புரியும் விதத்தில் சொல்வதற்காகக் கூகிள்  Google to Know என்ற சிறப்பு பக்கத்தை உருவக்கியுள்ளனர்.

இமெயில் முதல் இணையம் வரை எப்படி எல்லாம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக ஒவ்வொரு படியாக சொல்லித்தருகின்றனர், இண்டர்நெட் பயன்படுத்தும் புதியவர்கள் முதல், ஏற்கனவே இண்டர்நெட் பயன்படுத்துபவர்கள் வரை, அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் படங்களுடனே சொல்கின்றனர்.

ஒருவருக்குத் தேவையில்லை என்று விடும் தகவல்கள் கூட அடுத்தவருக்குத் தேவையானதாக இருக்கலாம். கூகிளின் இந்தப் பாதுகாப்பு வழிமுறையை அனைவரிடமும் எடுத்துச்செல்லுங்கள், இணையத்தில் பாதுகாப்பாக வலம் வர அனைவருக்கும் உதவும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.