Sunday, October 28, 2012

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட். – 2

எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் பணத்திற்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொண்டு விழிப்பவர்களுக்கு எச்சரிக்கையூட்டத்தான் வின்மணியார், 25-02-2011-லேயே எடுத்துரைத்த தகவலை மீண்டும் கவனப்படுத்துகின்றோம்  

http://winmani.wordpress.com/2011/02/15/online-credit-ii/

  பிப்ரவரி 15, 2011 at 12:46 பிப 10 பின்னூட்டங்கள்

ஆன்லைன் மூலம் எந்தெந்த வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளை
அடிக்கின்றனர் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம் இன்றும்
அதன் தொடர்ச்சியாக அதன் பாதுகாப்பு வழிமுறைகளைப் பற்றி
இந்தப் பதிவில் பார்க்கலாம்.

’ ஏட்டுச் சுரைக்காய்க் கறிக்கு உதவாது ‘ தினமும் இணையதள செக்யூரிட்டி
பற்றிப் பல புத்தகங்கள் வந்தாலும் எதுவுமே நடைமுறைக்குப் பயன்படாது
என்று முழுமையாகப் படித்த பின்தான் புரியும். இப்போது இந்தக் குற்றத்தைத்
தடுப்பதற்கான சில வழிமுறைகள்.
 
வழிமுறைகள்:

* ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்களின் வங்கி
கணக்கைக் கொடுத்து அதற்குப் பணம் அனுப்பச் சொல்லலாம்.

* இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி
கணக்குப் பயன்படுத்துவதாக இருந்தால் அதற்குத் தனி உலாவியும்
மற்றபடி தளங்களைப் பார்ப்பதற்குத் தனி உலாவியும் பயன்படுத்தலாம்.

* Crack செய்து கொடுக்கும் மென்பொருளை ஒரு போதும் தரவிரக்காதீர்கள்
இதனுடன் தற்போது உங்கள் கடவுச்சொல்லை அனுப்பும் ஸ்கிரிப்ட்-டும்
கூடவே வருகின்றது.

*  பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று
ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.

*  கடவுச்சொல் தட்டச்சு செய்யும் போது உலாவியில் ஏதாவது மெசேஸ் வந்து Ok , close என்று இருந்தால், நீங்கள் Esc பொத்தானை மட்டும்
அழுத்துங்கள் ஏன் என்றால் ok cancel , close எதை அழுத்தினாலும் ஒரே
வேலையைத்தான் செய்யும்.

* உலாவி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இடையில் Close அல்லது
Restart ஆனால் கண்டிப்பாக உங்கள் கவனம் உலாவியின் மேல்
இருக்கட்டும்.( தேவைப்பட்டால் உலாவியை uninstall செய்து மறுபடியும்
Install செய்து கொள்ளுங்கள் ).

* கடவுச்சொல்லை ஒரு போதும் உங்கள் கணினியில் சேமித்து வைக்காதீர்கள்.

ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.

* நெட்கஃபே- களில் சென்று பேங்க் Transaction செய்வதை கூடுமானவரை
தவிர்க்கப் பாருங்கள், பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால் Firefox
உலாவியைப் பயன்படுத்தி Transaction செய்யுங்கள்.

* லாட்டரியில் பரிசு விழுந்திருக்கிறது என்று வரும் இமெயிலில்
ஒருபோதும் உங்கள் கிரெடிட் கார்டுத் தகவல்களைக் கொடுக்காதீர்கள்.

எப்பொழுதும் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் செயல்படுங்கள்/

0 comments:

Post a Comment

Kindly post a comment.