Sunday, October 28, 2012

டிவிட்டரில் நேரடியாக உங்கள் கணக்கைத் திருட முயற்சி :- பாதுகாப்பு வழிமுறைகள் ! !

வின்மணியார் 21-02-2010-லேயே எடுத்துக் காட்டிய பாதுகாப்பு முறைகள் :-

  http://winmani.wordpress.com/2010/02/21/twitterattachagain/

டிவிட்டரைச் சமீபத்தில் தான் ஒரு வழிபடுத்தினர் ஹக்கர்கள் உடனடியாக
டிவிட்டர் தன் பாதுகாப்பை மேம்படுத்தியது.

பாதுகாப்புப் பணிக்கென்றே (Security Engineer)ஐ அதிக அளவில் நியமித்தது இனி டிவிட்டரில் கணினிக் கொள்ளையர்களைக் கண்டுபயப்படத் தேவையில்லை என்ற அறிவிப்பு டிவிட்டரில் இருந்து வெளிவந்தது.

இந்த அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் கணினிக்  கொள்ளையரின் அட்டகாசம் கொஞ்சம் குறைந்து இருந்தது ஆனால் மறுபடியும் கொள்ளையர்கள் தங்கள் பொழுதுபோக்கை நேரடியாக டிவிட்டரில் இப்போது ஆரம்பித்துவிட்டனர்.

இதிலிருந்து உங்கள் கணக்கை எப்படிப் பாதுகாக்கலாம் என்பது பற்றிய
வழிமுறையை பற்றிப் பார்ப்போம்.


படம் 1

கணினிக் கொள்ளையர்கள் டிவிட்டரில் நேரடியாக உங்களுக்கு
“Direct Message” அதாவது நேரடியான அழைப்புச் செய்தி
அனுப்புகின்றனர்

 ”என்னுடன் காபி அருந்த வருகிறிர்களா ” அல்லது ”இந்த படம் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது”அல்லது “எனக்கு உங்களை பிடிக்கும் ஏன் தெரியுமா ? ” இப்படி பட்ட வார்த்தைகளை அனுப்புகின்றனர் நாம் இப்படி வரும் செய்தியில் உள்ள சுருக்கப்பட்ட முகவரியைச்  (Short url) சொடுக்கியதும்
நம் டிவிட்டர் கணக்கு அவர்கள் கையில்.எப்படி எல்லாம் செய்தி
வரலாம் என்று படம் 1-ல் காட்டியுள்ளோம்.

இதுபோன்று உங்களுக்கு ஏதாவது செய்திவந்தால் அதைத் தவிர்த்துவிடுவது
நல்லது. உங்கள் டிவிட்டர் கணக்கும்  பாதுகாப்பாக இருக்கும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.