Thursday, October 18, 2012

அயல்நாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க நடைமுறை தேவை !

பஞ்சாபில் இருந்து குடி பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் பிரதிநிதிகள் அமைப்பு, பஞ்சாபிகள் தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்தும் நடைமுறையை இந்திய அரசு உருவாக்க வேண்டும் என்று
மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு இந்தி யத் தேர்தல்களில் வாக்களிக் கும் உரிமை ஓராண்டுக்கு முன் வழங்கப்பட்டது. ”மக்களவைth தேர்தல் நெருங்கிவிட் டது. வரவிருக்கும் மக்களவை தேர்தலில் அயல்நாடு வாழ் இந்தியர்கள் தங்களுடைய் வாக்குரிமையைப் பயன்படுத் தும் நடைமுறையை இந்திய அரசு உருவாக்க வேண்டும்” என்று நார்த் அமெரிக்கன் பஞ்சாபி அசோசியேஷன் தலைவர் சத்னம் சிங் சாஹல் கூறியுள்ளார்.

தகுதியுள்ள வாக்காளர்கள் இந்தியாவுக்குச் சென்று வாக்களிப்பது சிரமமானது என்பதுடன் பொருளாதார ரீதியாகக் கட்டுப்படியாகக் கூடியதல்ல என்றும் அவர் சொன்னார்.

 இந்நிலைமை யில் இந்திய அரசும், தேர்தல் ஆணையமும் அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு மாற்று நபர் மூலம் வாக்களிக்கும் உரிமையை அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராணுவம், பாதுகாப்பு அமைப்புகள், தேர் தல் பணியில் ஈடுபடுவோருக்கு அஞ்சல் வழியாக வாக்களிக்க அனுமதி தரப்படுவது போல் அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கும் அனுமதி தரப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைத்தார். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ்.ஒய். குரேஷியை நேரில் சந்தித்து ஒரு மனுவைத் தமது அமைப்பு அளித்தது என்றும் ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.                                                                                  

நன்றி :- தீக்கதிர், 18-10-2012.

0 comments:

Post a Comment

Kindly post a comment.