Thursday, October 18, 2012

போலி இ-மெயில்: வருமான வரித்துறை எச்சரிக்கை

வருமான வரித்துறையின் பெயரில் பொது மக்களுக்கு போலியாக அனுப்பப்படும் இ-மெயில்களுக்குப் பதிலளிக்க வேண்டாம் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

வருமான வரி செலுத்துபவர்களுக்கு

  info@incometaxindia.gov.in 

எனும் முகவரியிலிருந்து போலியாக இ-மெயில்கள் அனுப்பப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. அதில் வருமான வரியைத் திரும்ப அளிப்பதற்காக வங்கிக் கணக்கு எண், அது குறித்த தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை சார்பில் வங்கிக் கணக்கு குறித்த தகவல்களைக் கேட்டு எந்த இ-மெயிலும் இதுவரை அனுப்பப்படவில்லை. இதுபோன்று அனுப்பப்படும் போலி இ-மெயில்களைp பொது மக்கள் நம்பவோ, அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களைத் தரவோ வேண்டாம்.

வருமான வரியைத் திரும்பப் பெறுவது குறித்த சந்தேகங்கள், தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளை அணுகலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                                                       

நன்றி :- தினமணி, 18-10-2012





0 comments:

Post a Comment

Kindly post a comment.