Thursday, October 25, 2012

கைப்பற்றி வைத்துள்ள இந்தியப் பகுதிகளைத் திருப்பிக் கொடுத்து விடுமா சீனா ?

இந்தியாவும் சீனாவும் பிரிக்க முடியாத ராணுவக் கூட்டாளிகளாக மாற வேண்டும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடந்த 1962ஆம் ஆண்டு போர் வெடித்தது. அதன் 50ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

புகழ்பெற்ற இந்தியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், இந்தியாவின் சகோதர நாடு என்று குறிப்பிடுவது வழக்கம்.

இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள் என்று பாடுமாறு முன்னாள் பிரதமர் நேரு மக்களை ஊக்கப்படுத்தினார். துரதிருஷ்டவசமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை 1962ஆம் ஆண்டு நடைபெற்ற போர் பாதித்துவிட்டது.

பல ஆண்டுகள் வரை அந்த உறவு மேம்படவில்லை. நாடுகளிடையே நட்புறவைக் கவனமாக வளர்க்க வேண்டியுள்ளது. ஆனால் ஒரு முறை உறவு பாதிக்கப்பட்டால் அதை மீண்டும் சரிசெய்ய மிகவும் அதிகமான கால அவகாசமும் சக்தியும் தேவைப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நடந்து முடிந்த 50ஆவது ஆண்டு இதுவாகும். எனினும், இந்திய-சீன நட்பு மற்றும் ஒத்துழைப்பின் ஆண்டு இது என்று சீன அதிபர் ஹூ ஜிண்டாவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அறிவித்துள்ளனர். இது போரால் ஏற்பட்ட தழும்புகளை மறப்பதற்கு இரு நாடுகளும் விரும்புவதற்கான தெளிவான சமிக்ஞையாகும்.

இந்தியா-சீனா இடையே கசப்பான வரலாறு, வளர்ச்சி இடைவெளி ஆகியவை இருந்தபோதிலும், இரு நாடுகளும் தொன்மையான கலாசாரத்தையும் ராஜாங்க ரீதியிலான பட்டறிவையும் கொண்டுள்ளன.

புதிதாக வளர்ந்து வரும் நாடுகள் என்ற முறையில் அவை பொருளாதார வளர்ச்சி, தட்பவெப்ப நிலை மாற்றம் ஆகிய விஷயங்களில் ஒரே நிலைப்பாட்டை எடுக்கின்றன. இரு நாடுகளும் பிரிக்க முடியாத ராணுவக் கூட்டாளிகளாக மாற வேண்டும்.

புத்த மதத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியா பல நூற்றாண்டுகளுக்கு சீனா மீது தாக்கத்தைச் செலுத்தியது.

இது சீனாவின் ஒற்றுமைக்கு உதவியது. சீன மற்றும் இந்திய நாகரிகமானது இமய மலை மற்றும் கிங்காய்-திபெத் பீடபூமியை மூலமாகக் கொண்டதாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த இரு நாடுகளிடையே பூசல் ஏதும் இல்லை.

பல்வேறு துறவிகளும் பழமையான இந்தியக் கலாசாரத்தை சீனாவுக்கு கொண்டு வந்தனர். ஹான் வம்ச ஆட்சிக்குப் பிறகு சீனா அழிவைச் சந்தித்தது. அதன்பின் சீனாவின் ஒற்றுமைக்கு புத்த மதம் பெரும் பங்காற்றியது என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                                       

 நன்றி :- தினமணி, 25-10-2012

பறிக்கப்பட்ட இந்தியப் பகுதி திரும்பக் கிடைக்குமா ?

திபெத் விஷயத்தில் இந்தியாவும் ,சீனாவும் ஒரே நிலையை மேற்கொள்ளுமா ?

அடிக்கடி அருணாசலப்பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் போக்கினை 

சீனா கைவிட்டு விடுமா ? இவற்றிற்கும், இன்னும் இவை போன்ற பல 

கேள்விகளுக்கும் அக்கட்டுரையில் பதில்கள் உள்ளனவா ?                               






0 comments:

Post a Comment

Kindly post a comment.