Thursday, October 25, 2012

விபத்தில் வெடித்துச் சிதறிய சூடான் ஆயுதக் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதாகப் புகார்



ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள கார்டோன் என்ற இடத்தில் ராணுவ ஆயுதக் கிடங்கு உள்ளது. இந்த ஆயுதக் கிடங்கில் திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டுப் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் 2 பேர் உயிர் இழந்தனர்.

இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதற்கிடையே சூடான் நாட்டு மந்திரி அகமத் பிலால் இஸ்மாயில் எங்கள் ஆயுதக்கிடங்கை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதனால்தான் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 4 இஸ்ரேல் போர் விமானங்கள் பறந்து வந்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எங்கள் ஆயுத கிடங்கைத் தாக்கின என்று அவர் கூறியுள்ளார்.

2009-ம் ஆண்டு செங்கடல் பகுதியில் சூடான் நாட்டின் ஆயுதக் கப்பல் சென்றபோது அந்த கப்பல் மர்மமான முறையில் தாக்கி அழிக்கப்பட்டது. இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று அப்போது சூடான் குற்றம் சாட்டியது.

அதேபோல் இப்போது நடந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் மீது சூடான் பழி போட்டுள்ளது. ஆனால் இதுபற்றி இஸ்ரேல் தரப்பில் கேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டனர். இதற்கிடையே சூடான் நாட்டு அமைப்பு ஒன்று சூடான் அரசைக் குற்றம் சாட்டியுள்ளது. ஆயுதக்கிடங்கில் அளவுக்கு அதிகமாக ஆயுதங்களை வைத்ததால் விபத்து ஏற்பட்டு விட்டது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.                                                                                        

நன்றி :- மாலை மலர்:- 25-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.