Thursday, October 25, 2012

ஜமைக்காவை மிரட்டும் சக்தி வாய்ந்த புயல்: 2 லட்சம் பேர் வெளியேற்றம் !



அமெரிக்காவுக்குத் தெற்கே கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ளது ஜமைக்கா நாடு. தீவுப் பகுதியான இந்த நாடு அடிக்கடி புயலை சந்தித்துப் பெரும் அழிவுக்குள்ளாகிறது.

இந்த நாட்டின் அருகே கடலில் சக்திவாய்ந்த புயல் மையம் கொண்டுள்ளது. அது ஜமைக்கா நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் எந்த நேரத்திலும் ஜமைக்காவைத் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் தாக்கும்போது மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறைகாற்று வீசும், 25 சென்டி மீட்டர் அளவுக்கு பேய் மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரித்து உள்ளது. எனவே பயங்கர நாசம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டுப் பிரதமர் எட்வர்டு இந்த புயல் ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டைவிடச் சக்தி வாய்ந்ததாக இருக்கலாம் என்று வர்ணித்து உள்ளார்.

ஜமைக்கா நாட்டில் 1988-ம் ஆண்டிலும், 2004-ம் ஆண்டிலும் பயங்கர புயல் காற்று தாக்கியது. அதில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். பக்கத்து நாடான டோமினிக்கன் குடியரசு, ஹைதி நாடுகளையும் புயல் தாக்கலாம் என கருதி அங்கும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.                                                                            

நன்றி :-மாலைமலர், 25-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.