Wednesday, October 10, 2012

இணையதளத்தில் சே குவேரா டைரி !




புரட்சியாளர் சே குவேரா எழுதிய நாள்குறிப்பின் மூலப்பிரதி, பொலிவிய நாட்டின் ஆய்வாளரால் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்ஜென்டைனாவில் பிறந்த சே குவேரா, கியூபா புரட்சியின் நாயகனாகக் கொண்டாடப்படுகிறார். மாபெரும் புரட்சியாளரான குவேரா, பொலிவியாவின் மலைப்பகுதியில் மறைந்து வாழ்ந்த போது, 1967ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி பொலிவியப் படையினரால் கொல்லப்பட்டார்.

அவர், 1967ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை எழுதிய நாள்குறிப்புகள், கியூபாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 1968ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு, நூலாக வெளியிடப்பட்டது.

தற்போது, சே குவேரா எழுதிய நாள்குறிப்புகளின் மூலப்பிரதி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொலிவியா ஆராய்ச்சியாளர் கார்லோஸ் சோரியா கல்வேரோ இதனை வெளியிட்டுள்ளார்.

அச்சில் வெளியாகி இருக்கும் நாள்குறிப்புகளுக்கும், மூலப்பிரதிக்கும் இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள கார்லோஸ், அதில் குவேராவின் வார்த்தைப் பிரயோகங்கள் மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இனி சே என்ன எழுதினாரோ அதைக் கையெழுத்துப்பிரதியாக, w‌w‌w.c‌h‌e​b‌o‌l‌i‌v‌ia.‌o‌r‌g என்ற இணைய தளத்தில் பார்க்க முடியும் என்றார் கார்லோஸ்.                        

நன்றி :- தினமணி, லா பாஸ் (பொலிவியா)  10 October 2012




0 comments:

Post a Comment

Kindly post a comment.