Sunday, October 14, 2012

வைரங்களால் நிரம்பிய ”கான்கிரி” புதிய கோள் கண்டுபிடிப்பு !

பூமியை விட இரண்டு மடங்கு  பெரிய மற்றும் பெரும்பாலான பகுதிகள் வைரங்களால் நிரம்பிய புதிய கோள் ஒன்றை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

55 கான்க்ரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கிரகம், பூமியில் இருந்து சுமார் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.

இது அதிக  வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறதாம். அதாவது, ஒரு முறை பூமி சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள் ஆகும் நிலையில், வெறும் 18 மணி நேரத்தில் இந்த கோள் சூரியனை சுற்றி வந்து விடுகிறது என்று வியப்பில் ஆழ்த்துகின்றனர் விஞ்ஞானிகள்.

நமது பூமிப் பகுதி எவ்வாறு மண் மற்றும் தண்ணீரால் நிரம்பியுள்ளதோ, அதுபோல அந்தக்  கோளின் அடிப்பாகம், கார்பன், கிராபைட் மற்றும் வைரத்தால் நிரம்பியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.                    

நன்றி :- தினமணி , 14-10-2012






0 comments:

Post a Comment

Kindly post a comment.