Sunday, October 28, 2012

அறு சுவையும் உடல் நலத்திற்கு ஆறு ஆதாரங்கள் - மிகினும் குறையினும் நோய் செய்யும் ?

பாரி நிலையம், 184,பிராட்வே, சென்னை-1,1957-ல் முதல் பதிப்பாகவும், 1999-ல் இரண்டாம் பதிப்பாகவும், 2001-ல் மூன்றாம் பதிப்பாகவும், 2003-ல் நான்காம் பதிப்பாகவும்,  ச.கந்தசாமி முதலியார் என்பார் எழுதிய உணவு மருத்துவம் என்ற நூலை வெளியிட்டுள்ளது. 

இந்நூலில் உள்ளவற்றை உள்வாங்கிக் கொண்டு வாழ்க்கையைக் கொண்டு சென்றால் இங்கிலீஷ் டாக்டரைப் பார்க்க வேண்டிய அவசியமே ஏற்படாது..

நீண்ட காலமாக இந்தப் புத்தகம் வீட்டு நூலகத்தில் இருந்தபோதும், முழுமையாகப் படிக்கவில்லை.  ஏனெனில் இந்நூலைத் தொடர்ந்து படிப்பது  அனைவருக்கும் அவ்வளவு சுலபமல்ல.

ஆனால், இது போன்ற நூல்களைத் தேடி வாங்கிப் பொக்கிஷமாகப் போற்றும் புனிதர் ஒருவரது  நட்புக் கிடைத்ததால், தற்பொழுது  வீட்டு நூலகத்தில் உள்ளனவற்றையே தேடி எடுத்துப் படிக்கத் துவங்கியுள்ளோம்.

வயது முதிர்ந்த தெருவோரக் கிளிஜோஸியர் கூட கை விரல்களை விரிக்கச் சொல்லி, உடல் நிலையைப் புட்டுப் புட்டு வைத்து விடுவார்.

முடி வெட்டும் மருத்துவர் கூட மாந்தர்தம் நோய் அறிந்து மருந்து கொடுத்துக் குணப்படுத்துவார்.

இதற்கெல்லாம் மேலாக நல்ல சித்த வைத்தியரிடம் சென்றுவிட்டால் நோய்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து போகும்.

ஆனால், ஆங்கிலேயர் வருகையும், கிறித்துவப் பரவலும் நம் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டுய் விட்டன.

நாம் குழந்தைகளுக்கு முதன் முதலில் போடும் தடுப்பூசியே, அம்மைக் கிருமிகளை உடலில் ஏற்றுவதுதான். அவற்றை ஏற்றாமலிருந்தாலும், ஆரோக்கியமான பெற்றோர்களுக்குப் பிறந்திருந்தால், பிறக்கும் பொழுது, அந்த உடலில் இருக்க வேண்டிய இரத்தத்தின் அளவும், சுத்தமும் சரியாய் இருக்கும் பட்சத்தில் நோயே நம்மை அணுகாது. அவ்வாறு ஏதேனும் உடலின் ஒரு பகுதியில் அணுகும் பட்சத்தில், உடலின் எல்லாப் பகுதியிலும் உள்ள நல்ல ரத்தத்தின் கூறுகள், நோய் தாக்கிய பகுத்திக்கு ஒன்று போல் படை எடுத்து வந்து நோயை துவம்சம் செய்து விடும். ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையாகிவிட்ட இன்றைய இந்தியத் தலைமுறைக்கு இனி அந்த வாய்ப்பு இல்லை.

இருந்தாலும்  நம்பிக்கையோடு துவக்கத்திலிருந்தே சித்த மருத்துவத்தைத் தொடர்ந்தோமானால் வெற்றியும், பூரண நல் வாழ்க்கையும் நிச்சயம். 

அதற்கான ஆரம்பக் கட்டுரைதான் இது .உண்பனவற்றில் குறிப்பிட்ட சுவை உள்ள பொருட்க்லள் கூடினால் / குறைந்தால் என்று பொருள்கொண்டு படிக்கவும்.

அறு சுவையுமே ஆறு ஆதாரங்கள். அவற்றை அளவோடு உண்டால் மனிதருக்கு நோயே வராது. அவை மட்டுமே கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


ஆதாரம் -1 ,

துவப்புச்சுவை
தாது-  இரத்தம்,
 நாடி- வலம்-வாதம்,

துவப்புச் சுவை  அதிகமானால் வரும் நோய்கள்

கால் குடைச்சல், தூக்கமின்மை,  திமிர் முதலியன 
                                                                                                          
துவப்புச் சுவை குறைந்தால் வரும் நோய்கள்
உடல் வெளுத்தல், சோர்வு,  காமாலை,
கால் வீக்கம் , முதலியன                                                                                       

ஆதாரம் - 2.

சுவை -  உப்பு
தாது - எலும்பு
நாடி -  வலம்-பித்தம்

உப்பு அதிகமானால் வரும் நோய்கள்

வாந்தி ,பேதி, வாந்தி பேதி, சுரம்,
அதிக மூத்திரம் முதலியன

உப்பு குறைந்தால் வரும் நோய்கள்

பசியின்மை, புளியேப்பம்,
நெஞ்செரிவு, நடுமார்பு நோய்,
வயிற்று நோய் முதலியன

 ஆதாரம் -3

இனிப்புச் சுவை
தாது - தசை
நாடி-  வலம்-சிலேட்டுமம்

இனிப்புச்சுவை உடலில் அதிகமானால் வரும் நோய்கள்

ஸ்தூலம்,கட்டிகள், இராசகட்டி,
நீரிழிவு முதலியன.

இனிப்புச்சுvai உடலில் குறைந்தால் வரும் நோய்கள்

நீர்ச்சுருக்கு, உடல் மெலிவு முதலியன.

ஆதாரம் -4

புளிப்புச் சுவை
தாது -  கொழுப்பு
நாடி -  இடம்- வாதம்

புளிப்புச்சுவை கூடினால் வரும் நோய்கள்

மலச்சிக்கல், சோம்பல், அதிகத் தூக்கம்
குத்தல் நோய், சந்துவாதம்,
பாரிச வாயு முதலியன.

புளிப்புச் சுவை குறைந்தால் வரும் நோய்கள்

வாந்தி, தூக்கம் குறைதல்,
உடல் அமைஇ கொள்ளாமை,
சோர்வு, வயிறு கொட்டல்,
கிராணி, பேதி முதலியன

ஆதாரம் - 5

கசப்புச் சுவை
தாது- நரம்பு
நாடி- இடம்-பித்தம்


கசப்புச்சுவை அதிகமானால் வரும் நோய்கள்

தூக்கமின்மை,அரிப்பு, சொறி,
சிரங்கு, குஷ்டம் முதலியன

கசப்புச் சுவை குறைந்தால் வரும் நோய்கள்

அஜீரணம், சோம்பல், பலக்குறைவு,
அபானன் மிகல் ( வாயு ), தலை நோய்,
உடல் நோய், சுரம் முதலியன.

ஆதாரம் -6

காரச் சுவை
தாது - உமிழ்நீர்
நாடி - இடம்-சிலேட்டுமம்

காரச்சுவை அதிகமானால் வரும் நோய்கள்

நீர்ச் சுருக்கு, ஆசன வாய் எரிவு,
மலங் கொட்டல், சீதபேதி முதலியன.

காரச்சுவை குறைந்தால் வரும் நோய்கள்

நா வறட்சி, மலச் சிக்கல்,
அசீரணம், ருசியின்மை அல்லது அருசி,
மந்த பேதி முதலியன.


..  
1 comments:

  1. Hi, This book is a treasure me. We have it in our home (the 1st edition) and I started reading this 15 yrs ago. Every time i read it, I admire it. Happy to see the post.

    ReplyDelete

Kindly post a comment.