Sunday, October 28, 2012

உலகின் மிகப் பழமையான மாயான் நாகரீகக் கல்லறை கண்டுபிடிப்பு


மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவின் மேற்கில் ரெடால்குலே என்னும் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு  கோவிலில் பழங்காலத்து மாயான் நாகரீக கல்லறையை ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து ஆராய்சியாளர்கள் கூறியதாவது:-

இந்தக் கல்லறை 2000 வருடத்திற்கு முன்பு இப்பகுதியை ஆண்ட ஒரு மதத்தலைவரின் கல்லறையாக இருக்கலாம். ஆனால் இக்கல்லறையில் மனித எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இங்கு எமரால்டு எனப்படும் வைர ஆபரணங்களும், மனிதத் தலையுடன் கூடிய கழுகுச் சிற்பமும் கிடைத்துள்ளன. கி.மு. 700- 400-ம் ஆண்டு காலகட்டத்தில் இது கட்டப்பட்டிருக்கலாம்.

இந்த கல்லறையில் புதைக்கப்பட்ட மன்னருக்குக் கட்ச்மேன் என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். இவர் மத்திய அமெரிக்காவிலுள்ள ஓல்மெக் மற்றும் மாயான் நாகரீகங்களை இணைக்கும் ஒரு பாலமாக இருந்திருக்கலாம்.

கி.பி. 250- 800 ஆண்டு காலக்கட்டங்களின் போதும், மத்திய அமெரிக்காவில் மாயான் நாகரீக மக்கள் வாழ்ந்துள்ளனர்.  அவர்களின் ஆட்சி ஹோண்டூராஸ் முதல் மெக்சிகோ வரை பரந்து விரிந்து இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.                                                                                                                              

 நன்றி :-மாலைமலர், 28-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.