Sunday, October 28, 2012

ஒரே குடும்பத்தில் பல பெயர்களில் உள்ள 2.5 கோடி சமையல் கியாஸ் இணைப்புகளைத் துண்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு !


ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 6 சிலிண்டருக்கு மேல் தேவைப்படுபவர்களுக்கு இனி மானியம் இல்லாத விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மானியம் இல்லாத விலையில் ஒரு குடும்பத்தினர் எத்தனை சிலிண்டர்கள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஒரே குடும்பத்தில் பலரது பெயரில் சமையல் கியாஸ் இணைப்பு பெற்றிருப்பது தெரியவந்தது. இதை ஒழுங்குபடுத்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் தற்போது சுமார் 15 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் உள்ளன. இதில் சுமார் 2.5 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் ஒரே வீட்டில் பலரது பெயரிலும், முறைகேடாகவும் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த 2.5 கோடி சமையல் கியாஸ் இணைப்புகளை சரிபார்த்து ஆய்வு செய்து துண்டிக்க மத்தியப் பெட்ரோலிய அமைச்சகமும், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணை நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

2.5 கோடி கியாஸ் இணைப்புகளைத் துண்டிக்கும் நடவடிக்கை தொடங்கி விட்டதாக பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ஒரே முகவரியில், ஒரே பெயரில் இரு வேறு எண்ணை நிறுவனங்களிடம் சிலிண்டர் பெற்று வந்தால், அதில் ஏதாவது ஒரு இணைப்பு துண்டிக்கப்படும். சிலர் ஒரே முகவரியில் இரு வேறு பெயர்களில் சமையல் கியாஸ் இணைப்பு பெற்றிருப்பார்கள். அதிலும் ஏதாவது ஒரு இணைப்பு துண்டிக்கப்படும்.

கூட்டுக் குடும்பமாக வசித்தாலும், ஒரே வீட்டில் பலர் தனித்தனியாகச் சமையல் செய்வார்கள். அல்லது ஒரே முகவரியில் பலர் கியாஸ் இணைப்பு பெற்றிருப்பார்கள். இத்தகைய நிலையில் இருப்பவர்கள் தாங்கள் தனித்தனியே சமையல் செய்து வருவதை எண்ணை நிறுவன ஊழியர்களிடம் நிரூபித்துக் காட்டவேண்டும். அப்படி நிரூபித்தால் மட்டுமே சிலிண்டர்கள் இணைப்புத் துண்டிப்பில் இருந்து தப்ப முடியும்                                                     

நன்றி :- மாலை மலர், 28-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.