Sunday, October 28, 2012

கனடா அருகே பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு !



கனடா நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதியில் குயின் சார்லோட்டி தீவுகள் உள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.15 மணிக்கு அந்த தீவுப் பகுதியில் மிகப்பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவுகோல் என்ற கணக்கில் பதிவாகி இருந்தது.

இந்தப் பயங்கர நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் வீட்டை விட்டு ஒட்டம் பிடித்தனர். இதற்கிடையே அந்த தீவுப் பகுதியில் சில நிமிடங்கள் கழித்து 5.8 ரிக்டர் அளவு கோலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் குயின் சார்லோட்டி தீவில் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. இதற்கிடையே 7.7 ரிக்டர் அளவுகோலுக்குப் பதிவான நிலநடுக்கம் காரணமாகக் கோலரடோவில் உள்ள அமெரிக்கப் புவியியல் துறை சுனாமி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட் டது.

பிரிட்டிஷ் கொலம்பியா, தெற்கு அலாஸ்கா, வடக்குக் கலிபோர்னியா, ஏரேகான் மற்றும் வாஷிங்டன் பகுதிக் கடலோரங்களில் மக்கள் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பசிபிக் கடல் பகுதி சுனாமி ஆய்வு மையம், இன்றைய நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அறிவித்தது. அதன்பிறகே குயின் சார்லோட்டி மற்றும் அமெரிக்கக் கடலோர பகுதி மக்களிடம் நிம்மதி ஏற்பட்டது.                                                                                                   

நன்றி :- மாலைமலர், 28-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.