Saturday, October 20, 2012

நீரிழிவு நோயால் காதுகள் செவிடாகும் !

எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்கள் மனிதர்களைக் கொல்லக்கூடியது என்பது நாம் அறிந்ததே. ஆனால், பல நோய்கள் எவ்வித அறிகுறியுமின்றி நம் உடல் உறுப்புகளைப் பாதித்துக் கொண்டிருப்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவருகின்றன.

இன்று உலகையே அச்சுறுத்தும் நோய்களில் மிக முக்கிய பங்கு நீரிழிவு நோய்க்கு உள்ளது. உலகில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளதும் ஆய்வுகள் மூலம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பார்வைக்  குறைபாடு, நரம்புமண்டலப் பாதிப்பு, கால் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்றில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காது கேட்கும் திறன் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இது  நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட இரண்டு மடங்கும் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.

இதற்குக் காதின் உள்செல்லும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதுதான்
காரணம். ஏனெனில் நீரிழிவு நோயால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. மேலும், காதில் சேரும் அழுக்கை போக்கும் கெராடின் என்பது பாதிக்கப்படுகிறது. இதனால், அழுக்கானது காதிற்குள் சேர்ந்து காது கேட்கும் திறனைக் குறைக்கிறது. காதில் அழுக்குச் சேர்வது என்பது நீரிழிவு நோயின் அறிகுறியே என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, காதில் ஏதாவது சப்தமோ அல்லது இறைச்சலோ கேட்டால், அவர்கள் உடனே மருத்துவர்களை அணுகிச் சோதனை மேற்கொள்வது சிறந்தது என்று கூறுகின்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள்.                                 

நன்றி :- தீக்கதிர், 20-10-2012




0 comments:

Post a Comment

Kindly post a comment.