Saturday, October 20, 2012

மேலும் 24 மணி நேரத்துக்குத் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்




வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர். ரமணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை மற்றும் குமரிக் கடல் முதல் ஆந்திரக் கடல் பகுதியை ஒட்டியுள்ள வங்கக் கடல்வரை மன்னார் வளைகுடா ஊடாக
காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு வட, தென் மாவட்டங்களில் மலைப் பிரதேசங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

அதிக பட்சமாக

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 26 செ.மீ.

திருச்செந்தூர் 20.செ.மீ.,

மணிமுத்தாறு 17 செ.மீ.,

பொன்னேரி 13 செ.மீ.,

ராதாபுரம், மாதவரம், சிதம்பரம் தலா 12 செ.மீ.

மகாபலிபுரம் 11 செ.மீ.,

புதுக்கோட்டை 10.செ.மீ.

புதுச்சேரி, கடலூர், செங்கல்பட்டு தலா 9 செ.மீ.

மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.                                                                                   

நன்றி :- மாலை மலர், 20-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.