Monday, October 29, 2012

கனடாவில் கடும் நிலநடுக்கம் - அமெரிக்காவில் சுனாமி அலைகள் தாக்குதல்!

கனடாவின் மேற்கு கடலோரப் பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலநடுக்கத்தால் அமெரிக்காவின் ஹவாய் தீவு கடற்பரப்பில் சுனாமி அலைகள் தாக்கி வருகின்றன.

கனடாவின் மேற்கு கடலோரப் பகுதியில் மாஸ்ஸெட் நகரில் இருந்து 139 கிலோ மீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.7 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுக்கப்பட்டிருந்தது. பின்னர் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி பேரலைகள் தாக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது.

தற்போது ஹவாய் தீவுகளை சுமார் 3 அடி உயர அளவிலான சுனாமி அலைகள் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இது 6 அடி உயரம் வரை எழுந்து தாக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. 7.7 அலகுகளைக் கொண்ட நிலநடுக்கத்தை அவ்வளவு எளிதாக கருத முடியாது என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

அதே நேரத்தில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் தாழ்வான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.                        

நன்றி :-http://eeladhesam.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.