சமையல் எரிவாயு குறித்த விவர விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
www.indane.co.in என்ற இணையதளத்தில் இடது ஓரம் கீழே உள்ள "நோ யுவர் கஸ்டமர்' பகுதியிலிருந்து விண்ணப்பத்தை நுகர்வோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
காலக்கெடு கிடையாது: நுகர்வோரின் இப்போதைய சமையல் எரிவாயு இணைப்பு விவரங்களைச் சரிபார்க்க இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் கோரும் இந்த விண்ணப்ப விவரத்தைச் சமர்ப்பிக்க காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. எனினும், இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தங்களுக்கு உரிய கேஸ் ஏஜென்சியிடம் விரைவாக நுகர்வோர் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மானிய விலையில் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே (ஒரு சிலிண்டர் ரூ.398) வழங்கப்படும் என மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதன்படி, வரும் மார்ச் 31ஆம் தேதி வரை மானிய விலையில் 3 சிலிண்டர்களை மட்டுமே நுகர்வோர் பெற முடியும். மானியம் அல்லாத சிலிண்டர் விலை இன்றைய விலைப்படி ரூ.890 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நுகர்வோரின் முகவரி, இணைப்பு விவரங்களை முழுமையாகச் சரிப் பார்க்கும் வகையில், "நோ யுவர் கஸ்டமர்' என்ற படிவத்தை உரிய கேஸ் ஏஜென்ஸி நிறுவனத்திடம், நுகர்வோர் பூர்த்தி செய்து தரவேண்டும் என்று இந்திய எண்ணெய்-இயற்கை எரிவாயு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
சமையல் எரிவாயு இணைப்பு உள்ள நுகர்வோரின் புகைப்படம், கேஸ் இணைப்பு புத்தகத்தின் நகல், ரேஷன் அட்டை நகல் அல்லது வேலை செய்யும் நிறுவனத்தின் அத்தாட்சிக் கடிதம், நுகர்வோரின் புகைப்பட அடையாள அட்டை நகல், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றுடன் இந்த படிவத்தைப் பூர்த்தி செய்து தரவேண்டும் என்று கேஸ் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டவுடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்தப் படிவத்துக்கு ரூ.5 கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றும், மேலே குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி :- தினமணி, 29-10-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.