Monday, October 29, 2012

தில்லித் தமிழ்ச் சங்கம் தோற்றமும், வளர்ச்சியும் :- மாநாட்டு மலர்,2012, பகுதி 1.

தில்லித் தமிழ்ச்சங்க மாநாடு  குறித்த  அழைப்பிதழும் சங்க நிர்வாகிகள் அனைவரது படங்களும் பின்வரும் பதிவில் இடம்பெற்றுள்ளன.

http://rssairam.blogspot.in/2012/09/blog-post_2635.html

அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களின் சங்கமம் !

தில்லித் தமிழ்ச் சங்கம், 
TAMIL SANGAM MARG, SECTOR-5,
RAMAKRISHNAPURAM,
NEW DELHI, 110 022.

செய்திகள் , உதவி, அகில இந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புக்களின் மாநாட்டு மலர் 2012 ,

உள்ளத்தில் தீ- என்ற  தலைப்பில் வீ.இளங்கோ,BE, L.L.B, திரைப்படப் பாடலாசிரியரின் கவிதை 21-10-2012-ல் நமது வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டுப் பல தமிழார்வலர்களால் படித்து ரசிக்கவும் செய்கின்றனர் என்பதை மகிழ்வோடு தெரிவிக்கின்றோம்

வரலாறு படைக்கும் தில்லித் தமிழ்ச் சங்கம் என்ற கட்டுரை மூலம், சுதந்திரம் அடையுமுன்பே 1947-லிலேயே தில்லித் தமிழ்ச்சங்கம் துவக்கபட்டுவிட்டது என்பதறிந்து வியப்பும் மகிழ்வும் கொண்டோம்.

66 ஆண்டுகளின் செயல்பாட்டைத் தெரிந்து கொள்ள முயன்றோம்.முதல் 25 ஆண்டுகள் குறித்து வெள்ளி விழா மலரிலிருந்து எடுத்துரைக்கப்பட்ட இளமைப்பருவம் ,”நியூ மதராஸ் போர்டிங் அவுஸ்’ துவங்கியது, பின்னர் டெல்லித் தமிழ்ச் சங்கமாக 1946, ஜனவரியில் தோன்றியது, அவ்வாண்டு சித்திரை விழாவின்போது முறையாக இயங்கத் துவங்கியது, சிறு நூலகம் நிறுவியது என எந்தவித ஒளிவு மறைவுமின்றி உள்ளது உள்ளபடி கட்டுரை தொடர்கின்றது.

 83, துருக்குமான் சாலையில் இலவச இடமும், நூலகத்திற்கு அலமாரி கிடைத்ததையும் அறியமுடிந்தது.  தில்லி மையப் பகுதி, கனாட் பிளேசில், தரப்பட்ட தில்லி நகராட்சியின் இடத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகை ஆண்டொன்றிகு ரூ.1 தான் என்ற தகவல், வியப்பையும், மகிழ்ச்சியையும் தந்தது.

பொங்கல் விழாவும், சித்திரை விழாவும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே கொண்டாடி வந்த சங்கம், இடம் கிடைத்த பின்னர் இதரக் கலை, இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தத் துவங்கியது.

 தில்லி அரசு, ரூ.22000/- மலிவு விலைக்குத் தந்த, ஆசியாவிலேயே பெரிய குடியிருப்புப் பகுதியாக தென் தில்லியில் திகழும்   இராமகிருஷ்ணாபுரத்தில் 1962-1970- காலக் கட்டத்தில் 4 லட்சம் மதிப்புள்ள சொந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. ஆராய்ச்சி அரங்கம் இயங்கியது. ”சுடர்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட மலர் பல்வேறு வழிமுறைகளிலும் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டித் தந்தது.

சிறு அலமாரியில் துவங்கிய நூலகம் விரிவடந்தது. 2009-ல் கணினி மயமாக்கப்பட்டு 22000 நூல்களும், DDC முறையில் வகைப்படுத்தப்பட்டு, அவை “பொருள்” வகையிலும் பிரிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 2010-லிருந்து உறுப்பினர்களுக்கு வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்தபின் திருப்பித்தரும் வசதியும் செய்யப்பட்டுள்ளது..நூலகம், சுதந்திரப் போராட்ட வீரர்,  தியாகி சத்திய மூர்த்தி பெயரில் இயங்குகின்றது. சங்கச் சுடர்  இதழும் தில்லித் தமிழ்ச் சங்கத்தினரால் மாதந்தோறும்  வெளியிடப்படுகின்றது.

முதல் 25 ஆண்டுகள், 1971-1980 வரை, 1981-1990 வரை,  1991-200 வரை, 2001-2012 ஆகஸ்டு வரை-என்று ஐந்து கட்டங்களாகப் பகுத்துக் கொண்டு  தில்லித் தமிழ்ச் சங்கம் ஆற்றிவரும் தமிழ்ப் பணிகள் அனைத்தும் கட்டுரையில் விரிவாகக்  கூறப் பெற்றுள்ளன.

66 ஆண்டுகளின் வரலாற்றை, தில்லித் தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்களின் பெயர்கள் எதுவும் விட்பட்டுப் போகாமல் 22 பக்கங்களில் கட்டுரையாக்கிய திருமதி.ரமாமணி சுந்தர் பெரிதும் பாராட்டுதற்குரியவராகின்றார்..

அதே சமயம், அகில இந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புக்களை முதல் முறையாக ஐக்கியப்படுத்திய பெருமை தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கே உரியது என்பதையும் குறிப்பிட்டே தீரவேண்டும்.

எண்ணற்றோரது தன்னலமற்ற உழைப்பினை இந்தச் சிறுபதிவினில் எடுத்துக் கூற இயலாது என்பதற்காகத்தான் இந்தப் பதிவில் பெயர்கள் எதனையும் குறிப்பிடவில்லை.  

இந்த அகில இந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புக்களின் மாநாட்டு மலர்-2012-ஐத் தயாரிக்கும் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டபெரியவர், ப.முத்துக்குமாரசாமி அவர்களைப்பற்றி எழுத நிறையச் செய்திகள் உள்ளன.

எடுத்துக்காட்டாக,816 பக்கங்களைக் கொண்ட “ இந்திய வரலாற்றில் வ.உ.சி. “
என்னும் தலைப்பில் 2008-ல் அவரால் தொகுக்கப்பட்ட நூலே சான்றாகும்.,

இந்திய வரலாற்றில் வ.உ.சி,
ப.முத்துக்குமாரசாமி
நோபல் பப்ளிகேஷன்ஸ்
 எண், 10-B, முனுசாமி தெரு,
சாலி கிராமம்,
சென்னை-600 093
 816 பக்கங்கள் . விலை ரூ.450/-

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் இன்னும் சற்று விரிவாக எழுதித் தனி நூலாகப் பதிப்பித்தால், தமிழ்ச் சங்கங்களை நடத்துவோர் எல்லோம் சோர்வின்றி உற்சாகத்துடன் செயலாற்றிடத் தக்க வழிகாட்டுதலாக அமையும்.

தினமணியும், புதுதில்லித் தமிழ்ச்சங்கமும் இணந்து நடத்திய மாநாட்டில் பங்கேற்கவும்,  தமிழ்ச் சான்றோர் முன்னிலையில் சில நிமிடங்கள் பேசவும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த இறையருளை எண்ணி வியப்படைகிறோம்.

இம்மாநாடு சீரோடும் சிறப்போடும் எவ்விதக் குறையில்லாமலும் நிகழ்ந்திட  தில்லித் தமிழ்ச் சங்கத்தின்  தலைவர், எம்.என். கிருஷ்ணமணி, பொதுச் செயலர் இரா. முகுந்தன் ஆகியோரையும், அவர்கள்  தலைமையில் அயராதுழைத்த அனைத்து நிர்வாகிகளையும், அவர்களது முயற்சிகளுக்குத் துணைநின்ற தினமணி ஆசிரியர், கே.வைத்தியநாதன் அவர்களையும் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் மறவாது.

இதன் தொடர்ச்சியாக அனைத்துலகத் தமிழ் மாநாட்டினை நடத்திடவும் திட்டமிட்டுள்ள தில்லித் தமிழ்ச் சங்கத்தின் மாபெரும் குறிக்கோள் விரும்பிய வண்ணம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வணங்குகின்றோம்

இம்மாநாடு குறித்த எமது பதிவுகள் :-                                                 

21-09-2012              http://rssairam.blogspot.in/2012/09/blog-post_6212.html                                                   
                                 நல்லதொரு குடும்பத்துக்கு நாலு வழிகள் - தில்லித் தமிழ்ச்

                                 சங்கத்தில் அப்துல் கலாம் அறிவுரை ! 

 21-09-2012               http://rssairam.blogspot.in/2012/09/blog-post_9267.html        

                                 தில்லித் தமிழ்ச் சங்கத்தில் , ”தமிழ் இலக்கியச் சிந்தனைகள்

                                “ தமிழண்ணலின் தலைமை உரை !

                                  ”நல்ல ஊதியம் கிடைக்கிறது; ஆனால், புலமை இல்லை

                                “: தமிழாசிரியர்கள் குறித்து தமிழண்ணல் கவலை!,


21-09-2012                  http://rssairam.blogspot.in/2012/09/blog-post_4762.html 
                  
                                     தில்லித் தமிழ்ச் சங்கத்தில், சங்க இலக்கியம்

                                     என்னும் தலைப்பில் பேசிய இராம குருநாதன் !

21-09-2012                   http://rssairam.blogspot.in/2012/09/blog-post_5136.html

                                      நீதி இலக்கியங்கள் :- தில்லித் தமிழ்ச் சங்கத்தில்

                                     பேராசிரியர் இரா.செல்வக் கணபதி

21-09-2012                   http://rssairam.blogspot.in/2012/09/blog-post_885.html

                                     சிற்றிலக்கியம்- தில்லித் தமிழ்ச் சங்கத்தில்

                                     திருப்பூர் கிருஷ்ணன் 

21-09-2012                  http://rssairam.blogspot.in/2012/09/2012_23.htm 

                                    தில்லித் தமிழ்ச்சங்கம் - அகில இந்திய தமிழ் இலக்கிய

                                    அமைப்புகளின் மாநாடு 2012 - ஒரு பார்வை

                                     http://rssairam.blogspot.in/2012/09/blog-post_1109.html          

                                     செப்டம்பரில் புது தில்லியில் சங்கமித்த தமிழ்ச் சங்கங்கள் !

                                     மாநாட்டு மலர் குறித்த தகவல்கள் இன்னும் தொடரும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.