Thursday, October 18, 2012

இருக்கின்ற பொருள்கள் யாவை ? முதல்வன் இருக்கின்றானா? - கோவைக் கிழார்- (சிறுவருக்கான சிவஞானபோத விளக்கம் )

எங்கள் ஊருக்கு மேற்கே பெயர்பெற்ற கோவில் ஒன்று இருக்கிறது. அதற்கு அருகே வற்றாத ஓர் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் இரு கரைகளிலும் கண்ணுக்குக் குளிர்ச்சியான தென்னந்தோப்புக்கள் இருக்கின்றன.

ஆற்றில் இறங்கிக் குளிப்பதற்கு ஒழுங்கான படித்துறைகள் உண்டு. அந்தக் கோவிலில் நடக்கும் திருவிழாக் காலங்களில் நாங்கள் எல்லோரும் போய் அந்த ஆற்றில் குளித்துவிட்டு திருநீறு அணிந்து கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கிவிட்டு வருவது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டிலும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடக்கும். அது அமாவாசைக்கு அடுத்துத் தொடங்கிப் பெளர்ணமி அன்று தரிசனச்த்தோடு முடிவு பெறும். ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றுப் பக்கங்களிலிருந்து வந்து கடவுளைத் தரிசித்து விட்டுச் செல்வார்கள்.

அந்தத் திருவிழாக் காலங்களில் பலவிதமான தின்பண்டங்களும், விளையாட்டுச் சாமான்களும் விற்பது உண்டு. என்னைப் போன்ற சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டுச் சாமான்களின் மீது கண்ணோட்டம் மிகுதி. பொதுவாக சிறு நாணல் குழாய்கள் முதலியவைகளை வாங்கி அவை உடைந்து போகும் மட்டும் ஊதிக் கொண்டும் ஆட்டிக்கொண்டும் பொழுதைப் போக்குவோம்.

இந்த ஆண்டு நடந்த பெரிய திருவிழாவிற்கும் நான் என் பெற்றோர்களுடன் சென்றேன். கடைகளில் புதிது புதிதான விஉளையாட்டுச் சாமான்கள் இருந்தன. என் மனம் அவைகளை நாடியது. நான் சில புதுச் சாமான்களை வாங்கிக் கொண்டேன்.

மரத்தினால் செய்து   அழகாக வர்ணம் தீட்டிய ஆகாயக் கப்பல், நாட்டுப் பெரியார் நூல் நூற்கும் படம், முருகக் கடவுள் மயில் மீது ஏறியமர்ந்த படம் ஆகிய மூன்றையும் வாங்கிக் கொண்டு மிக மகிழ்ச்சியுடன் திரும்பினேன்.

கடைக்காரனிடம் அவற்றை வாங்கும்போது ‘இவை எங்கே யாரால் செய்யப்பட்டன ?’ என்று கேட்டேன். ’ஆகாயக் கப்பல் செய்தவன்
புதுச்சேரியில் ஒரு சிறந்த வேலைக்காரன். சாயம் போகவே போகாது’ என்றான்.

’நூற்கும் படம் எங்கே செய்தது’ என்றேன்.?. ’அது வட நாட்டில் புனேயில் ஒரு சித்திரச் சாலையில் பதித்தது’ என்றான்.

‘முருகக் கடவுள் படமோ’ என்றேன். ‘ புதிதாகச் சென்னையில் ஏற்பட்டிருக்கும் ஒரு அச்சகத்தில் பெயர்பெற்ற ஓவியனால் எழுதப்பட்ட பிரதியைப் பார்த்து ஆக்கப்பட்டது’ என்றான்.

அவைகளைக் கேட்டது முதல் இந்தச் சாமான்கள் எத்துணை அழகாக 
இருந்த போதிலும் தானே உண்டானவை அல்ல. ஒவ்வொன்றும் ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்டது என்று தெரிந்துகொண்டு அதே நினைவுடன் ஊர் திரும்பினேன்.

” உள்ளதற்குச் செய்வோரின்றிச் செவினை
இன்மையின் உலகம் செய்வோனை உடைத்து”

--சிவஞானபோதம் சூ.-1-அதிகாரம்-2-

என்பதற்கான விளக்கம் சிறுவருக்காக எழுதப்பட்டது.   

நன்றிக்குரியோர் :-

பதிப்பாசிரியர்:-   தவத்திரு. தயானந்த சந்திரசேகரன்                                             


திலகவதியார் திருவருள் ஆதீனச் செய்திமடல்,


1120, மச்சுவாடி, புதுக்கோட்டை- 622 001


தொலைபேசி:- 04322-228024 / 97891 82825


மின்னஞ்சல் :- sivabrindadevi@gmail.org

:-







0 comments:

Post a Comment

Kindly post a comment.