Wednesday, October 24, 2012

பத்திரிகையாளர்களின் கேமராவை உடைப்பதாக கூறிய வீரபத்ர சிங் மன்னிப்பு கேட்டார் !



இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங்கிடம் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அவர், கேமராக்களை உடைத்து விடுவேன் என்று ஆத்திரத்துடன் கூறினார். கடும் சர்ச்சையை ஏற்படுத்திய அவரது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சந்தீப் தீக்சித் கூறியிருந்தார்.

இந்நிலையில், சிம்லாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வீரபத்ரசிங், ‘நான் பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்று நான் அவ்வாறு பேசவில்லை. ஊடகங்கள் மீது மரியாதை வைத்துள்ளேன். அவர்கள் பணியை அவர்கள் செய்கிறார்கள். அதேசமயம் என் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுக்கிறேன்.

தேர்தல் களத்தில் பா.ஜனதா கட்சி தோல்வியடைந்தது. அதனால் அவர்கள் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்கள். இதுதொடர்பாகச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அவதூறு வழக்கும் தொடருவேன். நவம்பர் 4-ம் தேதி தேர்தல் முடிந்தபிறகு அனைத்துப் பிரச்சினைகளையும் சமாளிப்பேன்’ என்றார்.                                                                                    

நன்றி :- மாலைமலர், 24-1-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.