Wednesday, October 17, 2012

முன்னாள் போப் ஆண்டவரை விஷம் கொடுத்துக் கொல்லவில்லை: மடத்தலைவர் விளக்கம் !



வாடிகன்சிட்டி, அக்.17-

கடந்த 1978-ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்தவர் 1-வது ஜான்பால். இவர் பதவி ஏற்ற 33 நாளில் அதாவது 1978-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி திடீரென மரணம் அடைந்தார். அப்போது அவர் மாரடைப்பால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் விஷம் கொடுத்துக் கொலை செய்யப்பட்டதாகக் கத்தோலிக்கத் தலைமையகமான வாடிகன் நகரத்தில் புகார் செய்யப்பட்டது. ஆனால் அதை மடத்தலைவர் மான்சிக்னர் என்ரிகோடல் கொவால்கோ மறுத்துள்ளார். அதற்கான 167 ஆதாரங்களை வாடிகனில் தாக்கல் செய்துள்ளார்.

அவர் போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால்தான் மரணம் அடைந்துள்ளார். எனவே அவருக்குப் புனிதத்துவம் வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் தற்போதைய போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் தனக்கு முழு ஆதரவு அளித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

மரணம் அடைந்த முன்னாள் போப் ஆண்டவர் 1-வது ஜான்பாலின் 100-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இவர் 'ஸ்மைலிங்' போப் ஆண்டவர் என அழைக்கப்பட்டவர் பாரீசைச் சேர்ந்த இவர், அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகக்கூடியவர்.                                                                    

நன்றி :- மாலை மலர், 17-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.