இலண்டனின் லிவர்பூல் பகுதியைச் சேர்ந்தவர், ஒலிவியா மேனிங்க், வயது 12. அறிவுத் திறன் போட்டியில் கலந்து கொண்ட ஓலிவியா 162 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்ட். இந்த வெற்றியின் மூலம் உலகின் மிகவும் பழமையானதும், பெரியதுமான அதிக அறிவுத் திறன் பெற்ற சமூகமான மென்சாவில் ( Provides a forum for intellectual exchange among members. )இணையும் வாய்ப்பையும் ஓலிவியா பெற்றுள்ளார்.
ஐன்ஸ்டீன், ஹாக்கிங்க் ஆகியோரைவிட இவர் 2 மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். இதனால் உலகில் நுண்ணறிவு கொண்டவர்களில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”என்னுடன் படிக்கும் மாணாக்கர்களில் நிறையப்பேர் என்னிடம் வந்து அவர்களது வீட்டுப் பாடங்களைச் செய்து தரும்படி கேட்பர். இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு என்னுடைய ஞாபகத் திறனை வளர்த்துக் கொண்டேன்” என்றார் .
நன்றி :- ஜனசக்தி, 06-10-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.