Wednesday, October 17, 2012

கொலஸ்ட்ரால்-நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெண்டைக்காய் !






உலகளவில் மனிதர்களை அச்சுறுத்தும் நோய்களில்  நீரிழிவு நோயும் ஒன்று உலக அளவில் இந்தியாவில்தான் நீரிழிவு நோயால் அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுமார் 5 கோடிப்பேருக்கு நீரிழிவு நோய் உ:ள்ளது. இந்நோயை முழுமையாகக் குணப்படுத்த இயலாவிட்டாலும், கட்டுப்படுத்த முடியும்.இதற்கான பல வழிமுறைகளை இயற்கையே நமக்குக் கற்றுத் தருகின்றது.

வெண்டைக்காய் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குகின்றது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டோடு இருக்கவேண்டும். குறந்த அளவு கார்போ ஹைடிரேட் உல்ள உணவுகளைத்தான்  அவர்கள் அதிகம் உண்ண வேண்டும். வெண்டைக்காயில் ,குறந்த அளவே கிளசரி உள்ளதால், இது ந்நீரிழிவு நோயாளிக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. அது மட்டுமன்றி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்தம், மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு சிறு நீரைப் பாதிக்கக் கூடியது.

ஆனால் வெண்டைக்காய் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதால், சிறுநீர் நோய்களைத் தடுக்கிறது. அதிலும் சமைத்த வெண்டைக்காயைவிட, சமைக்கப்படாத வெண்டைக்காய்தான் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குகின்றது. இதில் உள்ள பைபர் சத்தானது ஜீரணத்த்திற்கு உதவுகின்றது. மேலும் கொலஸ்டாராலையும் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு. நீரிழிவு நோய் உள்ளவர்கள்  மருத்துவத்தோடு இயற்கையையும் நம்பினால் நோயின் கடுமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.                    நன்றி :- தீக்கதிர்:- 17-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.