Wednesday, October 17, 2012

தி.மு. ராசாமணியின் படைப்புகள் உண்மையானவை; ஒப்பனையற்றவை

மரணம் மனிதர்களைக் கொன்று விடுகிறதா? பலருக்கு அப்படித்தான் நேர்கிறது. ஆனால் சிலரை அதனால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.
மக்களுக்காற்றிய தொண்டினால் இயக்கச் செயல்பாட்டினால் மறக்க முடியாத நிகழ் வுகளைப் படைப்புகளாக்கும் திறனால், வடித்தெடுத்த வரலாற்றுப் பதிவுகளால் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். அப் படிப்பட்ட தோழர்களில் ஒருவர்தான் பொதுவுடைமை இயக்கப் போராளி - படைப்பாளி தோழர்  தி.மு. இராசாமணி.

அண்மையில் காலமான அவர் நினைவுகளுடன் புகழஞ்சலிக் கூட்டம் அவரது படைப்புகளை முன்வைத்து சென்னை யில் (அக். 13) நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் தென் சென்னை மாவட்டக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத் தில் ராசாமணியின் “பழனாத்தா”, “சங்க மம்”, “ஆறாத்தீ” புதினங்களை முன்வைத்து சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் சைதை ஜெ பேசி னார்.

“எழுத்தாளர்கள் என்றால் ஒரு சில வரையறை வைக்கப்பட்டுள்ளது. இப்ப டித் தொடங்கவேண்டும்; இப்படி முடிக்க வேண்டும்; அழகாக இருக்கவேண்டும்; சொல்வதில் புதிய முறை இருக்க வேண் டும் என்றெல்லாம் கட்டமைக்கப்பட்டுள் ளது. இதற்கு நாமும் ஆட்பட்டிருக்கி றோம். ஆனால் உண்மையைச் சொல்வதற்கு ஒப்பனை தேவை இல்லை. இதைத்தான் இராசாமணி தனது படைப்புகளில் செய்திருக்கிறார்” என படைப்புகள் மீதான சமகாலப் பார்வையை விமர்சனக் கண்ணோட்டத்தோடு அவர்
முன்வைத்தார்.

சங்கமம் புதினத்தில் புறாக் குஞ்சு என்றொரு பாத்திரம்
உருவாக்கப்பட்டி ருப்பதைக் குறிப்பிட்ட சைதை ஜெ, அந்தப் பாத்திரமும் உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாக டீக்கடை ஒன்றில் கிளீ னராக இருப்பதை நினைவுபடுத்தினார். தலைமறைவுக் காலத்தில்
கேரளாவிலிருந்து வந்து கிருஷ்ணப்பிள்ளை கலந்து கொள்ளும் கூட்டத்தில் தோழர் என்ற சொல் புறாக்குஞ்சுக்கு அறிமுகமாகிறது. கேரளாவின் இடதுசாரி இயக்க ஆளுமையான கிருஷ்ணப்பிள்ளையும் நானும் தோழர் என்ற முறையில் சமமா என்று எண்ணிப்பார்க்கிறான். வியப்பு மேலிட அவனது கற்பனைச்சிறகுகள் விரிகின் றன. கூட்டத்தின் முடிவில் கிருஷ்ணப் பிள்ளையைத் தோழரே என்று அழைத்து மகிழ்கிறான்.

தோழர் என்ற சொல்லின் மகத்துவம் நாவல் முழுவதும் இழையோடுகிறது. தோழர் என்ற சொல் கடலின் ஆழத்திலி ருந்து கதிரவனின் உச்சிவரை பரந்து விரிந்து கிடக்கும் பொருள் கொண்டது என்று கூறி, நார் மன் பெத்யூன் தோழமை உணர்வோடு தன்வசம் இருக்கிற ஒரே ஒரு பென்சிலின் ஊசியைப் படை வீரன் ஒருவனுக்குப் பயன்படுத்திவிட்டு நோயின் தாக்கத்தை தான் ஏற்றுக் கொண்டதை சுட்டிக்காட்டினார்.

சாதி ஆதிக்கக்காரர்களால் தோழர் இடுவாய் இரத்தினசாமி கொடூரமாகக் கொல்லப்பட்டதை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புதினம் ‘ஆறாத்தீ’. மிகச்சாதாரண மொழியில் ஒப்பனை ஏதும் இல்லாமல் எழுதப் பட்டுள்ள இந்தப்புதினத்தின் கடைசி வரிகளில் தான் உயிர்ப்பைக் காணமுடிகிறது. மரணத்தின் விளிம்பில் சொருகியகண்களில் மகளின் முகம் வருகிறது; மனைவி முகம் வருகி றது; தோழர்கள் முகம் வருகிறது; கடைசி யாக ஒரு கண்ணில் சிவப்பு நட்சத்திர மும் இன்னொரு கண்ணில் அரிவாள் சுத்தியலும் தோன்ற கண்கள் குத்திட்டு நின்றன என்று மரணத்திலும் இயக்கச் சிந்தனையைப் பதிவு செய்கிறார்  இராசாமணி. அவரது வாழ்க்கையும்
அப்படித்தான் அமைந்தது.

பழனாத்தாள் புதினத்தில் பெண்களின் ஆளுமையைச் சொல்கிறார். கணவனை இழந்த பெண் வாழ்க்கையைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் பாங்கு அதில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறிய சைதை ஜெ, இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்தார். இராசாமணியின்
படைப் புகளை ஒரே தொகுப்பாகக் கொண்டு வரவேண்டும் என்பது ஒன்று; பல தோழர்களின் வரலாற்றை அடுத்தத் தலைமுறைக்காகப் பதிவு செய்துள்ள அவரது வாழ்க்கை முறையை இயக்கப் பற்றினை அவரது துணைவியார் தோழர் செம்மலர் எழுதவேண்டும் என்பது மற்றொன்று.

இராசாமணியின் வரலாற்று நூல்கள் பற்றிப் பேசிய தமுஎகச மாநிலச் செயற்குழு உறுப்பினர் சுந்தரவள்ளி, ஆஷர்மில் பழனிச்சாமி,
கே. எஸ். கருப்பசாமி போன்ற தோழர்களின் தியாக வரலாறும் இயக்கப் பங்களிப்பும் அடுத்தத் தலைமுறைக்குத் தெரியாமல் போய்விடக் கூடாது என்ற அக்கறையோடு பதிவு செய்யப்பட்டுள் ளன என்றார். பெரிய தலைவர்கள் பற்றிய வரலாறு பரவலாக அறியப்படுகிறது. ஆனால் பகுதி சார்ந்து வாழ்ந்து மறைகின்ற பல தோழர்களின் வாழ்க்கையும் நமக்கெல்லாம் பாடமாக இருக்கின்றன. அவற்றைப் பதிவு செய்துள்ள இராசாமணியின் பணி பாராட்டுக்குரியது என்றார்.

ஏழ்மையில் வாடிய குடும்பத்தின் நிலைமையைக் கூறவந்தவர் மனைவி மக்களின் உடலில் கூட உபரி இல்லை என்கிறார். உபரி என்ற தத்துவச்
சொல்லினை அவர் பொருத்திப் பார்த்த இடம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இயக்கமாக உருவாகி அதன் ஆத வோடு வழிகாட்டுதலோடு போராடுவது என்பது வேறு; தனக்கோ அல்லது தன்னையும் உள்ளடக்கிய குழுவுக்கோ நீதி மறுக்கப்படும்போது போராடுவது என்பது வேறு; தோழர் கே. எஸ். கருப்பசாமி வாழ்க்கையில் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே போராட்ட உணர்வு இருந்ததைச் சொல்கிறார் இராசாமணி.

ஆஷர்மில் பழனிச்சாமியின் வரலாற் றைப் படிக்கும் போது உணர்ச்சி
கொப்பளிக்கிறது; ரத்தம் சூடேறுகிறது. போராளிகளுக்கு எதிரான முதலாளிகளின் சதியும் அதற்குத் தொழிலாளர்களில் ஒருவனே - நண்பனே உடந்தையாய் - கருங்காலியாய் இருப்பதுமான வரலாற் றுக் குரூரத்தை சுந்தரவள்ளி உணர்ச்சிப் பெருக்கோடு முன்வைத்தார். நெற்றிப் பொட்டிலும் மார்பின் இருபக்கங்களிலும் என மூன்று குண்டுகள் பாய்ந்து இறக்கின்ற தருணத்திலும் புரட்சி ஓங்குக! செங்கொடி வாழ்க என்று சொல்லும் துணிவைப் பெற்றவர்கள் இயக்கத்தின் புதல்வர்கள் என்பதை அவர் வரலாற்றுச் சம்பவங்களோடு இணைத்து விவரித் தார்.

இராசாமணியின் முதல் படைப்பே “நெஞ்சோடு கொஞ்சம்” என்ற கவிதைத் தொகுப்புதான் என்பதை எடுத்துக் காட் டிய தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம், பிறகு சிறுகதைகள் சில எழுதி இறுதியாகவும்
நிறைவாகவும் வரலாறுகளையும் புதினங்களையும் அவர் படைத்தார் என்றார்.

எப்போதும் புத்தகங்களுடனேயே வாழ்ந்தவர் ராசாமணி. படிப்பதையும் பிறரைப் படிக்க வைப்பதையும் நல்ல புத்தகங்களைத் தேடி விற்பனை செய்வதையும் கடைசி வரை, தனது லட்சியமாகக் கொண்டிருந்தவர். அதனால் தான் அவரது மறைவின் போது எழுதப்பட்ட கவிதை இப்படிச் சொல்கிறது;

“போய்ப்பாருங்கள்/அவரைப் புதைத்த/இடத்தில்/ புற்களுக்குப் பதிலாக / புத்தகங்கள் முளைக்கும்”

புத்தகங்களுக்கு முன்னதாக அவருக்குப் பரிச்சயமானது தீக்கதிர் நாளிதழ். ஒவ்வொரு நாளும் 65 கிலோமீட்டர் சைக்கிளிலேயே பயணித்து தீக்கதிர் விநியோகம் செய்தார். குறைந்த வருமானம் தான் என்றாலும் அதற்குள் எப்படி நேர்மையாகவும் எளிமையாகவும் வாழ்வது என்பதைக் கற்றுக் கொண்டவர்; மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்தவர்.

செம்மலர் இலக்கிய இதழ் விற்பனையிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார். இதன் வெளிப்பாடு தான் நாமகிரி என்ற காதல் துணைவியாருக்கு செம்மலர் எனப் பெயர் வைத்தழைத்தது என்று இராசாமணியின் நுட்பமான பலரும் பின்பற்றத்தக்க வாழ்க்கை நிகழ்வுகளையும் பதிவு செய்தார் கோவை சதாசிவம்.

புகழஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்ற ராசாமணியின் துணைவியார் செம்மலர், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இல்லற வாழ்க்கையில் இராசாமணி கற்றுத்தந்ததையும் அவரிடமிருந்து கற்றுக் கொண் டதையும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். பேப்பர் போடும் ஒருவருக்கு என்ன தெரிந்திருக்கும் என்று எனக்கேயான குடும்பப் பாரம்பரிய திமிர்த்தனத்தை மாற்றியவர் அவர் என்பதையும் வெளிப்ப டுத்தினார்.

“காதலும் உழைப்பும்/ கலந்ததே வாழ்க்கை

கனவுகள் கைக்குவரச்/ செய்வதே வாழ்க்கை

நாளைய உலகம் அதை/ வெல்வதே வாழ்க்கை

அது நம்பணி முன்னே/ என்பதே வாழ்க்கை”

- என்ற கவிதை வரிகள் மூலம் இராசாமணி-செம்மலர் இணைந்த வாழ்க்கை எப்படி இலக்கியமாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
இராசாமணி விட்டுச் சென்ற பணியை இயக்கத் தோடு இணைந்து முன்கொண்டு செல்வேன் என்று அவர் உறுதியளித்ததில் இராசாமணியின் உயிர்ப்பு இருந்தது.

“எமது

ஆலமரத்தின்

சிறுவிதை

அழகிய கோலத்தின்

எழிற்புள்ளி

சிவப்பு இலக்கியத்தின்

ஒரு அத்தியாயம்

தோழர் தி. மு. இராசாமணிக்கு

வீரவணக்கம்”

என்ற கவிதை வரிகளைக் கொண்ட இராசாமணியின் உருவப்படத்தை மூத்த தோழர் பால்வண்ணத்திடமிருந்து பெற் றுக் கொண்ட போது, செம்மலர் உடைந்து உருகினார் என்றாலும் அவரது உறுதி இராசாமணி பாதையில் நடைபோடவைக்கும் என்பதையே காட்டியது.

தொகுப்பு: மயிலைபாலு                                       நன்றி ;-தீக்கதிர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.