Wednesday, October 17, 2012

மாலி நாட்டில் வாலிபருடன் பேசிய பெண்ணுக்கு 60 சவுக்கடி !




திம்புக்கு, அக். 17-

ஆப்பிரிக்க நாடான மாலியில் திம்புக்கு பகுதி உள்ளது. இது இஸ்லாமியப் பழமைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பெண்களுக்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்கள் அந்நிய ஆண்களுடன் பேசக்கூடாது. அவ்வாறு பேசுவது பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒரு வாலிபருடன் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தாள். இதைப் பார்த்த போலீசார் அப்பெண்ணை 5 முறை எச்சரித்து அனுப்பினர். இருந்தும் அவர் தொடர்ந்து அந்த வாலிபருடன் பேசிக் கொண்டே இருந்தார்.

இதனால் அப்பெண் உள்ளூர்ப் பஞ்சாயத்தில் நிறுத்தப்பட்டார். இதையடுத்து அவருக்கு 60 சவுக்கடி தண்டனை விதித்துத் தீர்ப்பு கூறப்பட்டது.

இதன்படி அப்பெண்ணுக்கு பொதுமக்கள் மத்தியில் 60 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டன.                                                                                                                

நன்றி:- மாலைமலர், 17-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.