Wednesday, October 17, 2012

மாசுபடும் கங்கை நீரால் புற்றுநோய் அபாயம்: ஆய்வில் தகவல்



இந்தியாவில் வற்றாத ஜீவ நதியான கங்கை புனித நதியாகk கருதப்படுகிறது. இதில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேசியp புற்று நோய் கணக்கெடுப்பு ஆய்வறிக்கை வெயிடப்பட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது:-

கங்கை நீர் தொடர்ந்து மாசு அடைந்து வருகிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. கன உலோகங்கள் மற்றும் நச்சுத்தன்மை உடைய ரசாயனங்கள் அதிகளவில் கங்கை நீரில் கலந்துள்ளது. மாசுபடும் கங்கை நீரில் ஆர்சினிக், குளோரைட் போன்ற ரசாயனங்கள் அதிகமாக உள்ளது.

உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து சேரும் கழிவுநீரால் கங்கை அதிக அளவில் மாசுபடுகிறது. இப்பகுதியில் உள்ளவர்களுக்கு அதிக அளவில் பித்தப்பைப் புற்றுநோய் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.

மேலும் உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதியில் இது 2-வது இடத்தில் இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

இங்குள்ள 10 ஆயிரம் பேரில் 450 ஆண்கள், 1000 பெண்களுக்கு பித்தப்பை புற்று நோய் பாதிப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோல் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய்களும் கங்கை நதி ஓரம் வாழும் மக்களிடம் காணப்படுகிறது.

இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.                                                                         

நன்றி :- மாலைமலர், 17-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.