.அனுப்புநர்
டாக்டர்.டி.வி.கோவிந்தன். M.B.B.S.MS.,
10. ஹால்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்,
சென்னை- 600 010.
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமச்சர் அவர்கள்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.
இலஞ்சம் கொடுத்து அரசு இயந்திரத்தைத் தங்களுக்குச் சாதகமாகத் திருப்பிக் கொண்டு அப்பாவிகளின் வேலைகளை ஓரம் கட்டச் சொல்வோரை அரசியல் பணியாளர்களும் அரசியல்வாதிகளும் பிடித்துக் கொடுக்க ஊக்குவிக்க வேண்டும்.
மக்கள் தாங்களாகவே வலியவந்து லஞ்சம் கொடுக்கிறார்கள் என்றும், அவர்கள் கோரிக்கைகளில் உள்ள குற்றம், குறைகள், அநியாயங்களை மறைத்து அவர்களுக்குச் சாதகமாக வேலைகளைச் செய்துகொடுக்கும்படி லஞ்சம் கொடுத்து வற்புறுத்துகிறார்கள் என்றும், தனக்கு முன்னதாகக் காத்திருப்போரின் வேலை எப்படியோ போகட்டும், தனது வேலையை முன்னதாக முடித்துக் கொடு என்று, மக்கள் இலஞ்சம் கொடுத்து நெருக்குகிறார்கள் என்றும், அரசுப் பணியாளர்களும், அரசியல்வாதிகளும் கூறுகிறார்கள். இவர்கள் லஞ்சம் கொடுக்க வருவோரைப் பிடித்துக் கொடுக்க வேண்டும். பிடித்துக் கொடுப்போரை அரசாங்கம் கீழ்க்கண்டவாறு ஊக்குவிக்க வேண்டும்.
இப்படிச் செய்யும் அரசுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, விருப்ப இட்ட மாற்றம், பணி முதிர்வின்போது பணி நீட்டிப்பு, வட்டியில்லா வீட்டுக் கடன், வாகனக் கடன் அளிப்பது, அவற்றில் முன்னுரிமை அளிப்பது போன்றவற்றின் மூலம் இலஞ்சம் வாங்காத அரசு ஊழியர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இந்த நற்பணியச் செய்யும்போது இலஞ்சம் வாங்காத நேர்மையான அரசு ஊழியர்கள் கொல்லப்பட்டு விட்டால், கொல்லப்பட்டவரின் பிள்ளைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கவும், அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கவும் வேண்டும். இச்செயல்கள் மக்கள் சுமக்கும் ஊழல் சுமையைக் குறைப்பதால், இவைகளுக்கு ஆகும் செலவைக். அரசு சுமையாகக் கணக்கிடக் கூடாது.
விளையாட்டு வீரர்களுக்கெல்லாம் ஊக்கம் கொடுக்கிற நாம், சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படும் இத்தகைய மெய்யான அரசு ஊழியர்களுக்கும் ஊக்கம் கொடுக்கவேண்டும். இது மென்மேலும் சமூகத்திற்கு நற்பயனையே அதிகரிக்கச் செய்யுமே தவிர, அரசாங்கத்திற்குச் சுமையாகாது.
இதேபோல் தனக்கு இலஞ்சம் கொடுக்கபவரைப் பிடித்துக் கொடுக்கும் அரசியல்வாதிகளுக்குத் தேர்தல்களில் போட்டியிடும் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவை எல்லாம் நல்லாட்சி அமையவும், தங்கள் ஆட்சி என்றென்றும் தொடரவும் வழி வகுக்கும்.
தமிழக அரசாங்கம் இவைகளுக்கு அவசியமான வழிவகைகளைச் செது நல்லாட்சி அமைப்பதில் இந்தியாவிற்கு முன்னோடியாக வழிகாட்ட வேண்டும்.
இத்திட்டத்தினை சுமார் 10 வருட காலத்திற்குப் பரிசோதனையாக நடத்தினால் கூடப்போதும்.
டாக்டர். டி.வி.கோவிந்தன்.
நன்றி :- மக்கள் நினைத்தால்.....
தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்க மாத இதழ், செப்டம்பர்,12
53, 2-வது குறுக்குத் தெரு, பாரதி நகர்,
அம்பத்தூர், சென்னை, 600 053.
ஆசிரியர்:- இல.ஜெகநாதன், 9444939698.
இணை ஆசிரியர் :- திருக்குறள் அ.இரா.பெருமாள்
9444633365
9884763590, 9444164933, 944463365, 9043941307.
Saturday, October 13, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.