இண்ட்லி உலகப் பதிவர்கள் சங்கமம்...மும்பை- 20& 21 அக்டோபர் !
WordCamp is an informal gathering of bloggers, WordPress enthusiasts, podcasters, developers and designers.
The event will bring all these people together, under one roof, for two awesome days at Mumbai!
When?
20th & 21st October, 2012 (Lunch will be served)
Where?
Prabodhankar Thackeray Natya Mandir
Sodawala Lane, Chamunda circle Borivali West
Mumbai
IndiBlogger members can use the coupon codes INDIBLOGGER or IndiBlogger to get an exclusive discount of Rs.600.
(Coupon codes are case-sensitive, and are only valid until the 17th of September)
Register now:
http://www.indiblogger.in/bloggermeet.php?id=171
எங்கிருந்து தொடங்குவது ? என்ன செய்ய வேண்டும் ? என்பதே ஒரு செயலைத் துவங்குமுன் சாதனையாளர்களின் சிந்தனையாக இருக்கும். இண்ட்லி- யில் வலைப்பூவில் பெற்ற அனுபவங்களை எழுதச் சொல்லியபோது இந்த எண்ணமே என்னுள்ளும் எழுந்தது.
நினைவில் வாழும் மாற்றுத் திறனாளி, பாசிட்டிவ் அந்தோணி முத்துதான் எனக்குக் குருநாதர்; மற்றும் வழிகாட்டி. அழகியையும், வலைப்பூவையும் வடிவமைத்துக் கொடுத்து ஊக்குவித்தது அவரே. எழுதத் துவங்கியது, 11-02-1909. முதல் பதிவு, பெரம்பலூர் அருகில் உள்ள தேனூர் குக்கிராமத்தின் வாழ்க்கையோடு தன்னை இணைத்துக்கொண்ட 35 வயதுடைய கணினிப் பொறியாளர், செந்தில் குமார் கோபாலன். கொடுத்த தலைப்பு தமிழ் நாட்டின் தவப்பதல்வன்; மெய்யான மனித நேயன் பயிர் அறக்கட்டளை மூலம் ஆவர் ஆற்றிவரும் சேவைகள் அளப்பறியவை. அவரை அப்பகுதி மக்கள் காந்தி என்றே அழைத்து வருகின்றனர். அவரைப் போற்றாத ஊடகங்களோ, பத்திரிக்கைகளோ தமிழகத்தில் இல்லை, என்பதே அவரது பெருமைக்குச் சான்று.
ஒரு விரலில் போனோட்டிக் முறையில் தமிழைக் கணினியின் மூலம் உலகில் உலாவரச் செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. கணினியின் பதிவுகளால், நட்பு வட்டங்கள் பெருகின. துவக்கத்தில் எனது வலைப் பதிவிற்கான ஸ்கோர் 44. தற்போழுது 81. அனைத்திற்கும் காரணம், வின்மணியின் நட்பு. அவர், வலைப்பூவின் வடிவத்தையே எல்லோரும் பாராட்டத்தக்க அளவிற்கு மாற்றி அமைத்து விட்டார். எல்லாமே இலவசம். இன்றளவும் மொத்தப் பதிவுகள் 1355. பார்த்தவர்கள் 1,89,088. நான் பார்த்துத் தெரிந்து கொண்ட நல்லவைகள், நல்லவர்கள், என அனைத்தையும் மறக்காமல், மறைக்காமல் பதிவு செய்யும் களம் என வலைப்பூவில் தடம் பதித்து வருகின்றேன்
நல்லோர் பலருடன் ஏற்பட்ட நட்பு, அண்மையில், தினமணியும்-தில்லித் தமிழ்ச் சங்கமும் ஏற்பாடு செய்த அனைத்திந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புக்களின் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. எஸ்.ஆர்.எம். துணை வேந்தர் பொன்னவைக்கோ, முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல், தில்லித்தமிழ்ச் சங்கச் செயலர் முகுந்தன் ஆகியோர் அமர்ந்திருந்த மேடையில் 5 நிமிடங்கள் பேசும் வாய்ப்பினையும் பெற்றுத் தந்தது.
வலைப்பூ அனுபவங்கள் முழுவதயும் எழுதுவதென்றால் இந்தப் பதிவு மிகவும் விரிவடையும். எனவே, யாதும் ஊரே யாவரும் கேளிர் (உறவினர்கள் ) என்ற புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கின்றது தமிழ்க் கணினி உலகம். ”மகிழ்வித்து மகிழ்” என்ற புதிய ஆத்திசூடியைப் படைத்துக் கொண்டிருக்கின்றது. என்பதை மட்டும் சுருக்கமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நம்மிடையே உள்ள அனைத்து இலக்கியங்களையும் உள்ளது உள்ளபடி மின்னூலாக்கிடல் வேண்டும். இன்று வெளிவரும் புது நூல் கூட உடனடியாக மின்னூலாக்கப்படல் வேண்டும். வேண்டுமாயின் புதிய நூல்களுக்கு. ”ரீடபிள் ஒன்லி” என்ற முறையைப் பின்பற்றலாம்
”காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே” என்ற உண்மையைப் பட்டினத்தார் மூலம் உணர்ந்தவர்கள்- உணர்த்துபவர்கள் தமிழர்கள். இந்தப் புத்தகங்களில் மட்டும் பதிப்புரிமையைக் கோருவது விந்தையாக இருக்கின்றது.
எழுதப்படும் பலநூல்கள் புது நூல்களே அல்ல என்பதையும் கணக்கிற் கொள்ள வேண்டும். உதவிய நூல்கள் எழுதப்பட்ட புத்தகத்தில் 25% ஆகக் கூடப் பட்டியலிடப்படுகின்றன. தமிழரின் மனமாற்றம் எப்பொழுது நிகழுமோ?
தமிழ் விக்கிபீடியாவைத் தமிழறிஞர்களில் பெரும்பான்மையோர் கண்டு கொள்வதே இல்லை.
இவ்வாறு கணிப்பொறியில் நம்மால் சேமிக்கப்படும் மின்னூல்களே, நமது சந்ததியாருக்கு நாம் விட்டுச் செல்லும் யாராலும் அழிக்கமுடியாத பொக்கிஷம் !
0 comments:
Post a Comment
Kindly post a comment.