பி.எஸ்.என். எல். “ நியூ நேஷனல் ஸ்பெஷல் பிளான் “ ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. ரூபாய் 20 + 9 = 29 ரூபாய் செலுத்தினால் மட்டும் போதும். 50 நிமிடம் பேசும் நேரமும், 200 உள்ளூர் எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியினையும் தாராளமாக அனுபவிக்கலாம். 30 நாட்கள் கால அவகாசமும் உண்டு.
30 நாட்கள் சென்றபின், மீண்டும் 29 ரூபாய் செலுத்த வேண்டும். எந்த பி.எஸ்.என். எல். எண்ணுடன் பேசினாலும் வினாடிக்கு ஒரு பைசாதான். இதர எண்களுடன் பேசினால், 1.2 பைசா ........ இதற்குமேல் விளக்கத்தை 1503-ல் பெற இயலவில்லை. தொலைபேசி தானாகத் துண்டிக்கப்பட்டு விடுகின்றது. மேலும் 1503-ல் உயர் அதிகாரியுடன் பேசிட 9 -எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்கின்றனர், 197-, 1504 ( பிராட் ஃபேண்ட் விசாரிப்பு எண் ) ஆனால் 6 ஆம் எண்ணுக்கு மேல் ( டாப் அப் செய்யும் ஏஜெண்டுகளுக்கானது ) எந்த எண்ணுடனும் தொடர்பு கொள்ள இயலவில்லை. வசதியும் மறுக்கப்படுகின்றது.
இத்தகைய குறைபாடுகள் எல்லாம் களையப்பட வேண்டும். விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுப்பதில் கூட, இந்தி, ஆங்கிலம், தமிழ் என்ற வரிசை முறையே பின்பற்றப் படுகின்றது. அந்தந்த மாநிலத்தின் தாய் மொழி முதலிலும், ஆங்கிலம் இரண்டாவதும், மூன்றாவது வரிசையில் இந்தியும் இடம் பெற வேண்டும். உரியவர்கள் கவனம் செலுத்துவார்களா?
பி.எஸ்.என்.எல். பிராட்ஃபேண்ட் தான் மலிவாகவும், விரைவாகவும் இருக்கிறதென்று பயன்படுத்துவோர் அனைவருமே பாராட்டுகின்றார்கள். அப்படியிருக்க நஷ்டம் எப்படி வருகின்றது ?
பி.எஸ்.என்.எல். கட்டமைப்புக்களைப் பயன்படுத்தியே எல்லா அலைபேசி நிறுவனங்களும் இயங்குகின்றன. ஆனால், அவை அனைத்தும் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஏன் முற்றிலுமாகச் செலுத்துவதில்லை ?
பி.எஸ்.என். எல். நிறுவனத்தினடமிருந்து பணத்தை வசூல் செய்வதில் மட்டும் அரசு ஏன் கடுமையாக நடந்துகொள்கின்றது ?
மக்கள் பிரதிநிதிகள் ஒன்றுபட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு யாரால் எப்படி இடையூறு ஏற்படுகின்றது என்பதில் கவனம் செலுத்தி, அவற்றை நீக்கிடப் பாடுபட வேண்டும்.
வெறும் ஆர்ப்பாட்டங்களாலோ- பேரணிகளாலோ- அறிக்கைகளாலோ எவ்விதப் பயனும் விளையப் போவதில்லை.
நீதி மன்றங்களையும், சட்டசபை, பாராளுமன்றங்களையும் முறையாகப் பயன்படுத்தினாலே போதுமானது. இதற்கான முழுப்பொறுப்பு எண்ணற்ற தியாகங்களைச் செய்தும், கொள்கைவழிநிற்கவே முயலுகின்ற, சொத்துச் சேர்க்க முற்படாத, இலஞ்ச ஊழல்களுக்கு ஆட்படாத இடதுசாரிகளின் கரங்களில்தான் இருக்கின்றது.
சென்னை மாநகராட்சி மஸ்டர் ரோல் ஊழலில் மாட்டிக்கொள்ளாதவர்கள் இடதுசாரிகள் மட்டுமே. மாட்டிக்கொண்டவர்கள் நாட்டை ஆளுகின்றனர். இது விந்தையிலும் விந்தையன்றோ ?
பி.எஸ்.என்.எல். வளம் பெற உடனடியாகச் செய்ய வேண்டிய ஒரு வேலை. LAND LINE அனைத்தும் அனைவருக்கும் வாடகையின்றி இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அரசின் அறிவிப்பு.
இது ஒளவையாரின் “வரப்புயர” என்ற வார்த்தைக்கு ஒப்பாகும். லேண்ட் லைன் இலவசமானால், கெளரவத்திற்காகவே மக்கள் வாங்கி வைத்துக் கொள்வர். இலவசக் “கால் “ களை அனுமதிக்கக் கூடாது. பயன்படுத்தும் ஒவ்வ்வொரு காலுக்கும் கட்டணம் க்ட்டாயமாக வசூலித்துவிட வேண்டும். பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் / அதிகாரிகள் / சட்டசபை / பாராளுமன்ற உறுப்பினர்கள் / குடியரசுத் தலைவர் ஈராக அனைவரது வீட்டு உபயோகத்திற்கான அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
மக்கள் அனைவரும் ஃப்ராட்பேண்ட்டிற்கும் பி.எஸ்.என்.எல்.-ஐப் பயன்படுத்த முன்வருவர். மேலும் தொலைக்காட்சிப் பட்டிகள் / கணினிகள் மூலமான சகல சமூக நிகழ்வுகளுக்கும் ஆப்டிகல் பைபரைப் பயன்படுத்தும் அளவிற்குக் க்ட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும்.
நாளைய இந்திய தொலைபேசி / அலைபேசி அனத்துமே பி.எஸ்.என்.எல். கைவசமே. கனவு மெய்ப்படும் காலம் கம்யூனிஸ்டுகளின் கைகளில்.! இதிலும் தும்பை விட்டு விட்டு வாலைபிடிக்க முயற்சி செய்யக்கூடாது .வருமுன் காத்தல்தானே முறையான வழி ?
0 comments:
Post a Comment
Kindly post a comment.