அரசுப்பள்ளிகளில் 6 மாதத்திற்குள் கழிப்பறை வசதி செய்ய வேண்டும்-உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு !
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற் றும் யூனியன் பிரதேசங் களில் உள்ள அரசுப்பள்ளி களில் குறிப்பாகப் பெண்கள் பயிலும் பள்ளிகளில் 6 மாதத்திற்குள் கழிப்பறை கட்டப்பட்டிருக்க வேண் டும் என உச்சநீதிமன்றம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குப் புதனன்று உத்தர விட்டது. இந்தப்
பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு, குடிநீர் வசதி ஆகியவையும் செய்திருக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீதிபதி கே.எஸ்.ராதா கிருஷ்ணன் தலைமையிலான உச்சநீதிமன்ற
அமர்வாயம் இதுகுறித்துக் கூறுகையில், ஏற்கெனவே உச்சநீதி மன்றம் கூறிய அறிவுறுத்தல்படி, நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்றது. அதன்படி 6 மாத காலத்திற்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
கடந்த அக்டோபர் 18ம் தேதியன்று, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அனைத்து மாநிலங்கள் மற் றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுப்
பள்ளிகளில் குறிப்பாகப் பெண்கள் கழிப்பறை கட்டப்பட வேண்டும் எனக் கூறி இருந்தது.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி ஏற்படுத்த நீதி மன்றம் அறிவுறுத்த வேண் டும் என தாக்கல் செய்யப் பட்ட பொதுநலன் வழக்கு மனு மீது, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வரவேற்கப்படவேண்டிய தீர்ப்பு. தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கும், பொதுநல வழக்கை உச்சநீதிமன்றத்திற்க்குக் கொண்டு சென்றோர்க்கும் நன்றி சொல்வோம்.
சட்டமன்ற / பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி ஆதாரம் முழுமையும் பள்ளிகளின் சுகாதாரத்திற்கு மட்டுமே செலவழிக்கவேண்டும் என்றும் சட்டம் வந்துவிட்டால் ஒரே தடவையில் இதனை எளிதாகச் செயல்படுத்திவிடலாம்.
சென்னை வீதிகளின் பெயர்கள் பளிச்சென்று தெரிய 65 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. இதுபோல் இன்னும் எண்ணற்றவைகளில் பொதுநலனில் அக்கறை கொண்டோர் ஆர்வம் செலுத்த வேண்டும்.
நன்றி :- தீக்கதிர்
0 comments:
Post a Comment
Kindly post a comment.