Friday, October 19, 2012

நியூ செர்சி அமுதம் குழுமம் சுட்டிக்காட்டும் அணாசலக் கவிராயரின் பாடல் !

அன்பர்களே கீழ்க்காணும் ஏன் பள்ளி கொண்டீரையா என்னும் செம்மையான பாடலைத்
தமிழிசைத் திலகம் சுதாரகுநாதன் அவர்களால் மோகனம் என்றூ இந்நாளில் அழைக்கப் படுவதும்
முல்லைத் தீம்பாணிமென்றும் சாதாரி என்றும் சங்கக் காலத்தில் அழைக்கப் பட்டதும் ஆகிய பண்ணில்
(பாணி = ஐந்து சுரங்கள் கொண்ட பண்)
இசைக்கப் பட்டு எம்.பி.3 வடிவில் பதிக்கப்பட்டுக் கீழ்க்கண்ட சுட்டியில் ஏற்றப் பட்டுள்ளது
[ரியல் ஓடியோ இயக்கியில் அதைக் கேட்க முடியும்]:

http://www.egroups.com/files/meykandar/Sudha-EnPaLLiKoNDIraiyA.mp3
[உரிமை: அமுதம் குழுமம், நியூ செர்சி, அமெரிக்கா http://www.amuthaminc.com/previews2.htm
அந்தப் பாட்டு "பிந்துமாலினி" என்னும் சுவடியில் உள்ளது;
http://www.webindia.com/sudha/newreleases.htm#
[அது 7-மெகா; விரைவில் ரியல் ஓடியோப் போலும் வேறு வடிவத்திற்கு மாற்றிய பின்
மீண்டும் சுட்டியை அனுப்புகிறேன்.]

வழக்கம்போல் தமிழிசைப் பாடலைக் குறைந்தது இரண்டுமூன்று முறை கேட்டால்தான் அதன் முழுமையைச் சுவைக்கத்
தொடங்க முடியும். பின்னர்ப் பன்னூறுமுறை கேட்டாலும் சலிக்காமல் ஆசையைத் தூண்டும்வகையில் இருக்கும்.
எனவே இதைக் கேட்டுச் சுவைத்துப் பெரும் பயன் அடைக.
இங்கே "கௌசிகன் சொல் குறித்ததற்கோ/ஈசன் வில்லை முறித்ததற்கோ" என்னும் அடிகளில் அந்த அடி
முடியும்ப்போது ஓகாரத்தை இழுத்து அலைபோல் பாடும் பொழுது மோகனத்திற்கு உரித்தான குணம் வெளிப்படுவதைச்
சுவைக்கலாம். அங்கே சுதா ரகுநாதனின் தலை சிறந்த குரல் வளமும் இசைத் திறனும் தேனாக வெளிப்பட்டு நெஞ்சில்
வருடுவதை உணரமுடியும்.

பெ.சந்திரசேகரன்.


-----

From:
Parthasarathy rajparthasarathy@s...

பாகம்-1.

அருணாசலக்கவிராயர் இராம நாடகக் கீர்த்தனைகள்.
**************************************

தமிழ் இசையில் சிறந்த மூவருள் சீர்காழி அருணாசலக்கவிராயர் சாலிவாகனசகம்
1634 வீஜய ஆண்டு கி.பி.1711 பிறந்தார்.இவர் முத்தமிழ்ப் புலமை வாய்ந்த வித்தகர்.
இராமபிரான் திருவருளால் கவிச்சக்ரவர்த்தி கம்பனை மனதில் தன் குருவாகக் கொண்டு
தமிழ்தாய்க்கு, இராம நாடகக் கீர்த்தனைகளை இயற்றி சமர்ப்பித்தவர்.கம்பனுடைய
இராமாயனத்தை அடிப்படையாகக் கொண்டு கீர்த்தனைகள் மூலம் நாடகமாக தேனின்
இனிய தமிழில் பெரும் காவியமாக படைத்த ஆற்றல் இவரை சேர்ந்தது. இவர்
கீர்த்தனைகள் மிகவும் பாராட்டுக்குரியதாக மக்கள் மத்தியில் நிலைத்துவருகிறது.
இவருடைய கீர்த்தனைகளை மிகவும் பிரபலமாக செய்தவர் மகா சங்கீத வித்வான்
அரையகுடி இராமனுஜ அய்யங்கார் அவர்கள்.நானே சென்னை கோகலே மன்றத்தில்
பல தடவைகள் கேட்டு ரசித்தவன்.
கம்பனின் நயம் முழுவதும் எளிய வழக்குச் சொற்களால் உணர்த்த முடியும் என்பதைத்
தான் இயற்றிய கீர்த்தனைகள் மூலம் எடுத்து காட்டியுள்ள இவர் புலமைத் திறமையையும்,
கவிதையை பாடலாக இயற்றிய நயத்தையும் நாம் படித்து வியப்படைய செய்கிறது.கம்பனால்
கையாளப்பெற்ற அரிய கற்பனைகளையும் உவமைகளையும் படிப்பவர் அனைவரும் படித்து
சுவைக்கும் முறையில் அமைந்தது இவருடையக் கீர்த்தனைகள்.சீர்காழி அருணாசலக்
கவிராயரால் 18-ம் நு�ற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பெற்றது..கம்பன் தனது
இராமாயணத்தைத் திருவரங்கத்துப் பெருமான் சந்நிதியில் முதற்கண் அரங்கேற்றின வரலாற்றை அறிந்த
இவரும் தானும் தன் நு�லை முதற்கண் திருவரங்கத்தில் அரங்கேற்ற
விரும்பினார்.எனினும் சில இடையூர்களும் சிக்கலும் உண்டாக அரங்கேற்றுவதற்கியலாது
போயிற்று.பெரும் துயரமுற்ற கவிராயர் திருவரங்கநாதனிடம் தன் துயரத்தை
முறையிடும் பாணியில் அவரை இராமனாகவும் கண்ணனாகவும் மனத்தில் கொண்டு
மனத்தை உருகும் வகையில் அற்புதமான பின்வரும் ஒரு கீர்த்தனையால் எம்பெருமானை வழிப்படலானார்:

" ஏன்பள்ளி கொண்டீர் அய்யா-ஸ்ரீரங்கநாதரே நீர்
ஏன் பள்ளி கொண்டீர் அய்யா (ஏன்)
அநுபல்லவி
ஆம்பல் பூத்தசய பருவத மடுவிலே-
அவதரித்த இரண்டாற்று நடுவிலே (ஏன்)
சரணங்கள்
1) கோசிகன் சொல் குளித்ததற்கோ- அரக்கிக்
குலையில் அம்பு தெறித்தற்கோ
ஈசன் வில்லை முளித்ததற்கோ- பரசு
இராமன் உரம் பறித்ததற்கோ

மாசிலாதமிதி லேசன் பெண்ணுடனே வழிநடந்த இளைப்போ
து�சிலாதகுகன் ஓடத்திலே கங்கை துறைகடந்த இளைப்போ
மீசரமாம்சிர கூடச்சிகரக்கல் மிசைகடந்த இளைப்போ
காசினிமேல் மாரீசன்ஓடிய கதிதொடர்ந்த இளைப்போ ஓடிக்
களைத்தோ தேவியை தேடி
இளைத்தோ மரங்கள் ஏழும்
தொளைத்தோ கடலைக்கட்டி
வளைத்தோ இலங்கை என்னும்
காவல் மாநகரை இடித்த வருத்தமோ
ராவணாதிகளை அடித்த வருத்தமோ (ஏன்)

2. மதுரையி லேவரும் களையோ- முதலை
வாய்மகளைத் தரும் களையோ
எதிர்எருதைப் பொரும் களையோ- கன்றை
எடுத்தெறிந்த பெரும் களையோ

புதுவை ஆனமுலை உண்டுபேயினுயிர் போக்கி அலுத்தீரோ
அதிரஓடிவரும் குருவிவாயை இரண் டாக்கி அலுத்தீரோ
துதிசெய் ஆயர்களைக் காக்க வேண்டிமலை து�க்கி அலுத்தீரோ
சதிசெய் காலினால் காளிங்கன் மணிமுடி தாக்கி ஆலுத்தீரோ மருதம்

சாய்த்தோ ஆடுமாடுகள்
மேய்த்தோ சகடுருளை
தேய்த்தோ கஞ்சன்உயிரை
மாய்த்தோ அர்ச்சுனனுக்காகச்
சாரதியாய்த் தேர்விடுத்த வருத்தமோ
போரில் சக்கரம் எடுத்த வருத்தமோ (என்)
...

இவ்வாறான கவிராயருடைய உருக்கமான வேண்டுகோளுக்கு திருவரங்க பெருமான்
ஆட்கொள்ள திருவுள்ளம் கொண்டு அவருடைய கனவில் தோன்றி கம்பன் சடகோப
அந்தாதி பாடிய பின் அரங்கேற்றிய விவரம் கூறி நீரும் நம்மாழ்வாரைப் போற்றி
பாசுரம் பாடி அரங்கேற்றுவீராக என்று அருளிச் செய்தார்.பெரிய பெருமாள்
திருவுள்ளம்படி கவிராயரும்,கருடாழ்வாரையும்,சேனைமுதலியாரையும்,சடகோபரையும்,
பஞ்சாயுதங்களையும் போற்றி அரங்கேற்றினார்.கோவில் அதிகாரர்களும் கவிராயருக்கு
பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.....
--------------------
நன்றி :- அமுதம் குழுமம், நியூ ஜெர்சி !

0 comments:

Post a Comment

Kindly post a comment.