Sunday, October 21, 2012

என்னது இந்தியா- சீனா இடையே போர் நடந்துச்சா? 80 விழுக்காடு சீனர்கள் எழுப்பும் கேள்வி இது!

பெய்ஜிங்: இந்தியா-சீனா இடையே போர் நடைபெற்று 50 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் இந்தியாவுடன் போர் நடைபெற்றது என்பதே 80 விழுக்காடு சீனர்களுக்குத் தெரியவில்லை என்று ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்திருக்கிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 1962 ஆம் ஆண்டு போர் நடைபெற்றது. இப்போரில் 3ஆயிரம் இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இன்று சீனாவுடனான போரின் 50-வது ஆண்டு நினைவு நாள். இதையொட்டி சீன ஊடகங்கள் பல்வேறு கட்டுரைகள், கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் கருத்துக் கணிப்பு!

1962ஆம் ஆண்டு போர் பற்றி 15 விழுக்காடு சீனர்களுக்குத்தான் தெரிந்திருக்கிறது. 80 விழுக்காடு சீனர்களுக்கு இப்படி ஒரு போர் நடைபெற்றதே தெரியவில்லை.

இந்தியாவைப் பற்றி நடுநிலையாக கருத்து தெரிவித்தவர்களும் 80 விழுக்காட்டினராக இருக்கின்றனர். 17 விழுக்காடு சீனர்களுக்கு இந்தியாவே பிடிக்காது என்று கூறியுள்ளனர்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இன்னொரு போர் வெடிக்குமா? என்ற கேள்விக்கு 40 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் ‘வாய்ப்பு இருக்கிறது' என்றே கூறியுள்ளனர். இப்படி ஒரு போர் நடக்க வாய்ப்பே இல்லை என்பது 17 விழுக்காட்டினரது கருத்தாக இருக்கிறது.

வரலாற்றை நன்றாகத்தான் தெரிந்து வைத்திருக்கின்றனர் சீனர்கள்!

0 comments:

Post a Comment

Kindly post a comment.