Sunday, October 21, 2012

உள்ளத்தில் தீ ! - வீ.இளங்கோ B.E.L.L.B.

உள்ளத்தில் தீ இருந்தால்
பள்ளத்தில் உள்ளவனும்
மலை உச்சிக்குச் செல்லலாம்
மா உலகத்தை வெல்லலாம்
பின்னணி தேவையில்லை
முன்னணிக்கு வர !

செருப்புத் தத்தவனின்
செல்ல மகன்தான்
செங்கொடியைச்
சிங்கமேன ஏந்திய
ஸ்டாலின் !

ஆதிக்க அமெரிக்காவின்
அதிபராய் இருந்த
ஆபிரகாம் லிங்கனின்
அன்னையும் தந்தையும் - விவசாயிகள் !

வேலைக்காரியின் பேரன்! தன் காலுக்கடியில் உலகை
வளைத்துப் போடச் நினைத்த சூரன்
உலகத்தையே உலுக்கிய
ஹிட்லரை எல்லோருக்கும் தெரியும்
ஆனால் அவரின் தந்தைக்கே
அவர் தந்தை பெயர் தெரியாது !

ஈரானின் இரும்பு மனிதன்
இடி நுழக்க சதாமுக்கோ
தான் துளிர்விடும் போதே
தாயிடம் விட்டுச் சென்ற தந்தை !

மனதிற்குள் தீக் கொழுந்து
விட்டு எரிந்தது-இவர்கள்
மாமனிதர்களாக முடிந்தது !

தீ மட்டும் மனதிற்குள் இல்லையென்றால்
தீர்ந்து போவாய் நீ மனிதா !
தீ கொண்டு தீமைகளைத் துரத்து
தீர்ப்பு உன் கையில்
நீ ஜெயிப்பதும் தோற்பதும்\உன்னைப் பொறுத்தது !

நன்றி :- அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புக்களின் மாநாட்டு மலர் 2012.

0 comments:

Post a Comment

Kindly post a comment.