Saturday, October 27, 2012

கிரிக்கெட் சிந்தனை உடைய வலைப்பதிவருக்கு 5 லட்சம் பரிசு பெற ஓர் வாய்ப்பு !


சன் ஐ.பி.எல் அணிக்கு பெயர் சூட்டினால் ரூ.5லட்சம் பரிசு


சன் குழுமம் ஏலத்தில் எடுத்துள்ள ஐதராபாத் ஐ.பி.எல் அணிக்கு சூப்பர் பெயர் வைப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என்று சன் குழுமம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு பதிலாக ஐதராபாத் நகரை மையமாகக் கொண்டு புதிய அணி உதயமாகியுள்ளது.

இதனை சன் குழுமம் ஏலத்தில் கைப்பற்றியுள்ளது. இந்தப் புதிய ஐ.பி..எல் அணிக்குப் பெயரைத் தேர்வு செய்வதற்காகப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது சன் குழுமம்.

போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பெயரைத் தேர்வு செய்து அனுப்பலாம். அதற்கான விவரங்களை அறிய சன், கே, சன் மியூசிக், ஆதித்யா மற்றும் சுட்டி தொலைக்காட்சிகளைப் பார்க்கவேண்டும்.

அதில்தான் போட்டி குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் பெயரை அனுப்பிய போட்டியாளருக்கு ரூ. 5,00,000 மெகா பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.                                                  

நன்றி :- ஒன் இந்தியா, 27-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.