Friday, October 26, 2012

ஏழைக் குடும்பத்தினருக்கு வீடு கட்ட ரூ.4 கோடிக்குக் கற்பை ஏலம் விட்ட கல்லூரி மாணவி !



பிரேசிலைச் சேர்ந்தவர் கேத்ரீனா மிக்லியோரினி (20). உடற்பயற்சிக் கல்லூரி மாணவியான இவர் ஆன்- லைனில் தனது கற்பை ஏலம் விட்டார். எனவே, அவரது கற்பை விலைக்கு வாங்கக் கடும் போட்டி நிலவியது. இந்தியாவைச் சேர்ந்த ருத்ரா சாட்டர்ஜி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக்மில்லர், ஜேக்ரைட் உள்பட 15 பேர் ஏலம் கேட்டனர்.

அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த ருத்ரா சாட்டர்ஜி முன்னணியில் இருந்தார். இருந்தும் ஜப்பானைச் சேர்ந்த நாட்சு என்பவர் அவரது கற்பை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு பிரேசிலில் உள்ள தனது சொந்த மாகாணமான சாண்டா காத்ரீனாவில் ஏழ்மையில் வாடும் குடும்பத்தினருக்கு வீடு கட்டி தந்து உதவ இருப்பதாக கேத்ரீனா மிக்லியோரினி தெரிவித்துள்ளார்.

தனது கற்பை ஏலம் விட்ட மாணவி மிக்லியோரினியின் இச்செயல் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் அதன் மூலம் அவர் ‘விர்ஜின்ஸ் வாண்டடு’ என்ற ஆஸ்திரேலியர்களின் டாகுமெண்டரி படத்திலும் நடிக்கத் தேர்வாகியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது:-

இதை ஒரு வியாபாரமாக நான் கருதுகிறேன். ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்வதற்குரிய நல்ல வாய்ப்பாக இதைக் கருதுகிறேன். எனவே, இப்பட வாய்ப்பு எனக்கு ஒரு போனஸ் என்றார். இப்படத்தில், இவரது கற்பை ஏலம் எடுத்த நாட்சுவும் நடிக்கிறார்.                                                                     

நன்றி :-மாலை மலர், 26-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.