Monday, October 22, 2012

3டி தொழில் நுட்பத்தில் நவீன ஆளில்லா விமானம்: அமெரிக்க மாணவர்கள் கண்டுபிடித்தனர் !




அமெரிக்காவின் விர்ஜுனியா பல்கலைக்கழகம் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்டிக் டர்பன் என்ஜினை வடிவமைத்தது. அதுகுறித்த தகவல்கள் படத்துடன் யூடியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதைப் பார்த்த மிட்ரீ கார்ப்பரேசன் நிறுவன அதிகாரிகள் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் 2 புதிய திட்டங்களை நிறைவேற்ற இருப்பதாக என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டனர்.

அதையடுத்து ஸ்டீவன் ஈஸ்டர் என்ற ஒரு என்ஜினீயரிங் மாணவர் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்துடன் ஆளில்லா விமானம் தயாரிக்க முன்வந்தார். எனவே அப்பணி அவருக்கு வழங்கப்பட்டது.

அவர் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் பிளாஸ்டிக்கினால் ஆன ஆளில்லா விமானத்தை வடிவமைத்து உருவாக்கினார். அதற்கான ஆலோசனைகளை விர்ஜினியா பல்கலைக்கழக மெக்கானிக்கல் மற்றும் ஏரோ ஸ்பேஷ் என்ஜினீயரிங் முன்னாள் பேராசிரியர் டேவிட் ஷெப்லர் இவருக்கு வழங்கினார்.

இந்த விமானம் தயாரிப்பதில் ஸ்டீவன் ஈஸ்டருக்கு மேலும் பல மாணவர்கள் உறுதுணையாக இருந்தனர். இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் கெஸ்விக் அருகே உள்ள மில்டன் விமான தளத்தில் 4 தடவை நடந்தது. அப்போது அது மணிக்கு 72.4 கி.மீட்டர் வேகத்தில் பறந்தது.                                                                

நன்றி :- மாலைமலர், 22-10-2012











0 comments:

Post a Comment

Kindly post a comment.