தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி. ஆகாஷ் 16 வயதில் தேசிய சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்று தமிழகத்துக்குp பெருமை சேர்த்துள்ளார். இவர்,
16 வயதில் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற மற்றொரு தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த், மேற்கு வங்க
வீரர் திப்யேந்திர பருவா ஆகியோருடன் பதினாறு வயதில் பட்டம் வென்றவர்கள்
பட்டியலில் மூன்றாவது நபராக இணைகிறார்.
கொல்கத்தாவில் 50வது டாடா தேசிய முதன்மை சதுரங்கப் போட்டிகள் நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக் கிழமையோடு போட்டிகள் முடி வுக்கு வந்தன. கடைசி சுற்றான 13வது சுற்றில் இவர் கிராண்ட் மாஸ்டர் தீப் சென்குப்தாவுடன் சமன் அடைந் தார். போட்டிகளில் அதிர்ஷ்டம் இவர் பக்கம் இருந்திருக்க வேண்டும். 11வது சுற்றில் இவர் அதுவரை முதல் இடத்தில் இருந்த பெட்ரோலியம் வீரர் எம்.ஆர்.வெங்கடேஷூடன் ஆட வேண்டும். ஆனால் கண்டிப் பான வருகை நேர விதிகள் காரணமாக நான்கு நிமிடங்கள் தாமதமாக வந்த வெங்கடேஷ் தோற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆகாஷூக்கு ஒரு புள்ளி அளிக்கப்பட்டது. சென்னை மேல்நிலைப்பள்ளி யில் கணினி அறிவியலில் 11ம் வகுப்பு படிக்கும் ஆகாஷூக்கு பட்டம் பெறும் வாய்ப்பு புலப்பட்டது. அதை அவர் நன்கு பயன்படுத் திக்கொண்டார். ஆகாஷ் 12வது சுற்றில் மீண்டும் வெங்கடேஷூடன் ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட் டது. மனம் நொந்து போயிருந்த வெங்கடேஷ், அவரிடம் தோற்றார். அதற்குப்பின் அடுத்த சுற்றில் ஆகாஷ் சமன் செய்தால் போதும் என்ற நிலையில், அச்சுற்றில் தீப் சென் குப்தா சமன் கேட்டவுடன் ஆகாஷ் கொடுத்து விட்டார். போட்டிகள் தொடங்கும் முன்ன தாக முதல் பத்துக்குள் இடம்
பெறலாம் என்று எதிர்பார்த்தேன். 11வது சுற்றில் நடந்த எதிர்பாராத முடிவு
காரணமாக எனக்குப் பட்டம் பெறும் வாய்ப்பு உள்ளதை உணர்ந்தேன் என்று ஆகாஷ்
பட்டம் வென்ற பின்னர் கூறினார். தேசியப்பட்டம் வென்றதால் இவருக்கு சர்வதேச மாஸ்டர் பட்டம் கிடைத்துவிட்டது.
கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்குரிய முதல் தகுதியும் அவருக்கு கிடைத்துள்ளது. அத்துடன் இந்தியாவின் சார்பில் உலகக்கோப்பையில் ஆடும் வாய்ப்பும் அவருக்கு எட்டியுள்ளது. அவருக்கு பரிசுத்தொகையாக ரூ1.75
லட்சமும் கோப்பையும் வழங்கப்பட்
டது.
தேசிய முதன்மை போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிப்
போட்டிக
ளில் இவர் மூன்றாவதாக வந்து முதன்மைப் போட்டியில் பங்கேற்றார். ஆகாஷ் 13 சுற்றுகள் நடந்த போட்டியில் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். இரண்டாவது இடத்துக்கு 8.5 புள்ளிகளுடன் மூன்று பெட்ரோலிய நிறுவன வீரர்கள் போட்டியிட்டனர்.
சிறந்த முன்னேற்றப் புள்ளிகள் அடிப்படையில் விதித் சந்தோஷ் குஜராத்தி(90) இரண்டாம் இடத்தையும், அருண் பிரசாத் மூன்றாம் இடத்தையும், தீப் சென்குப்தா நான்காம் இடத்தையும் அடைந்தனர்.எம்.ஆர்.வெங்கடேஷ் ஐந்தாம் இடத்தைப் பிடித்தார்.
நன்றி :-தீக்கதிர், மற்றும் அனைத்து ஊடகங்கள்.
| |||||||
Tuesday, October 16, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.