Tuesday, October 16, 2012

அமெரிக்காவில் 14 மாநிலங்களில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு : இதுவரை 15 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள 14 மாநிலங்களில் மூளைக் காய்ச்சல் பாதிப்பு கடுமை யாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக இது வரை 15 பேர் உயிரிழந்துள் ளனர்.

அமெரிக்காவின் மசாகு செட்ஸ் பகுதியில் உள்ளது நியூ இங்கிலாந்து கூட்டு மைய மருந்தகம். இங் கிருந்து உடல் தசைகள் வேகமாக வளரச் செய்வதற் கான மருந்துகள் அமெரிக் காவின் 23 மாநிலங்களில் உள்ள 17 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. இதில் 14 ஆயிரம் பேர் இம்மருந்து உட் கொண்டுள்ளனர். இந் நிலையில், இம்மருந்தை உட்கொண்ட 14 மாநிலத் தைச் சேர்ந்தவர்களுக்கு மூளைக்காய்ச்சல் நோய் ஏற் பட்டுள்ளது கண்டுபிடிக் கப்பட்டது. இதுவரை சுமார் 205 பேர் மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக் கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இம் மருந்தகத்தை அதிகாரிகள் மூடியதோடு மட்டுமல் லாமல், மருந்துகளை திரும் பப் பெற்றுள்ளதாக அமெரிக்க சுகாதார மற்றும் மனிதச் சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

இதில், டென்னெஸ்ஸீ மாகாணத்தில் தான் அதிகளவு பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இங்கு மட் டும் 53 பேருக்கு இந்நோய் ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில், மிச்சிகன் மற்றும் வர்ஜினியா மாகா ணங்கள் உள்ளன. இங்கு முறையே 41 மற்றும் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மற்ற மாநிலங் களான புளோரிடா, இல்லி னோயிஸ், இண்டியானா, மேரிலாண்ட், நியூ ஜெர்ஸி, வடக்கு கரோலினா, ஓகி யோ மற்றும் டெக்சாஸ் மாநிலங்களும் பாதிக்கப் பட்டுள்ளன.

இதுகுறித்து விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் துவங்கியது.

மேலும், அமெரிக்க மருந்துத் தொழிற்சாலை களை ஒழுங்குப்படுத்த கடு மையான ஒழுங்குமுறை நட வடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித் துள்ளனர்.

அமெரிக்காவில் தற் போது கூட்டு மையத்திட மிருந்து மருந்துகளை பெறும் முறை அதிகரித்து வருகிறது. இம்மையங்கள் மிகப்பெரிய மருந்து நிறு வனங்களை விட குறைந்த விலைக்கு மருந்துகளை விற் பனை செய்கின்றன. அமெரிக் காவில் சுமார் 56 ஆயிரம் கூட்டு மைய மருந்தகங்கள் உள்ளன. அதேபோல், அமெரிக்காவில் மருந்து நிறுவனங்களை கட்டுப் படுத்தும் அதிகாரம் பெட ரல் ஏஜென்சிக்கு உள்ளது. இதுபோன்ற கூட்டு மைய மருந்தகங்களைக் கட்டுப் படுத்தும் அதிகாரம் இல்லை. மேலும், இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை களை இந்த கூட்டு மைய மருந்தகங்கள் பின்பற்று வதுமில்லை.

எனவே, அனைத்து மருந்து நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் வகையி லான ஒழுங்குமுறை நட வடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்று தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.