Tuesday, October 16, 2012

வெளிப்படையான முறையில் 143 தலைமையாசிரியர்களுக்கு ஆன்-லைனில் பதவி உயர்வு !


தமிழகம் முழுவதும் 143 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் திங்கள்கிழமை நிரப்பப்பட்டன.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள 2,488 அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் மாதம் 400 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் சிலர் பதவி உயர்வு வேண்டாம் என்று மறுத்ததாலும், தலைமையாசிரியர்கள் விருப்ப ஓய்வு உள்ளிட்ட காரணங்களாலும் 143 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டன.

ஏற்கெனவே, தயாரிக்கப்பட்ட பதவி உயர்வுப் பட்டியலில் போதிய உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தன. இந்த பதவி உயர்வு கலந்தாய்வை ஆன்-லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கலந்தாய்வு நடைபெற்றது.

மிகவும் வெளிப்படையான முறையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரிகள் தங்களுக்கு விருப்பமான இடங்களை தேர்வு செய்தனர்.   முன்னதாக, 1,080 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு மாவட்ட மற்றும் ஆன்-லைன் முறை மூலம் நடைபெற்றது.                                                       

  நன்றி :-By தினமணி, சென்னை

First Published : 16 October 2012 06:23 AM IST





0 comments:

Post a Comment

Kindly post a comment.