Friday, September 21, 2012

சிற்றிலக்கியம்- தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திருப்பூர்க் கிருஷ்ணன்

 தில்லித் தமிழ்ச் சங்கமும், "தினமணி'யும் இணைந்து நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் "தமிழ் இலக்கிய சிந்தனைகள்' எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிற்றிலக்கியம் என்ற தலைப்பில் பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசியது:


 

சிற்றிலக்கியத்தை குறித்து சுருக்கமாகப் பேச சொல்வது குங்குமச் சிமிழை கடலுக்குள்  அடைப்பது போல ஆகும் தொண்ணூற்று ஆறு சந்தங்களை  உள்ளடக்கியது.

ஒலி நயத்தோடு எழுதப்பட்ட சிற்றிலக்கியங்கள் மிக எளிமையானவையே. இவற்றை புரிந்து கொள்ள உரைநடை தேவை இல்லை. படித்தாலே மிக தெளிவாக புரியக்கூடியது. கம்பராமயணத்துக்கு முந்தையது சிந்தாமணி.
இன்றும் ஒலி நயத்தோடு எழுதப்படும் பாடல்கள். சிற்றிலக்கியத்தில் அழகும், அலங்காரமும் காணப்படுகின்றன. அதில் ஆழமான அர்த்தங்களைக் கொண்டது. இலக்கணத்தோடு எழுதப்பட்டது. அற்புதமான   சந்தம். வாழ் நாளேல்லாம் படித்து கேட்டு மகிழுகிற பாடல்களைக் கொண்டது  சிற்றிலக்கியப் பாடல்கள்
.
 சிற்றிலக்கியத்தில் உள்ள அந்தாதி பாடல்கள் வேறெந்த மொழிகளிலும் காண முடியாது.

சிலேடைக்கு ஒரு உதாரணத்தை கூற வேண்டும். என்றால் ஒரு விழாவுக்கு கி.ஆ.பெ. சுவநாதனை அழைத்தேன். அவருடைய பெயர் அழைப்பிதழில் அச்சிடப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. அழைப்பிதழில் இல்லாத கி.ரா.வை அழைத்தேன். விழாவில் முடிவில் அவர் சொன்னோர் இருக்கலாம் அச்சு வெல்ல அல்ல என்றார். இது போன்ற  சிலேடைகளுக்கு ஒரே சொல்லுக்கு நான்கு அர்த்தங்கள் தரும்.

சிற்றலக்கியத்தில் வட்டார வழக்குச் சொற்கள் காணப்படுவது சிறப்பு. சிற்றிலக்கியத்தில் பாடல்கள் இலக்கண விதிகளுக்கு உள்பட்டு பாடப்பட்டுள்ளன. அழகான நடை, அழகான கற்பனையை கொண்டது. சொல்லழகு, படிக்க படிக்க இனிப்பது சிற்றிலக்கியம்.

 இதேபோன்று, காப்பிய இலக்கியம் என்ற தலைப்பில் தெ. ஞானசந்தரமும், பக்தி இலக்கியம் என்ற தலைப்பில் சொ.சோ.மீ. சுந்தரமும், புத்திலக்கியம் என்ற தலைப்பில் சந்திரசேகரனும் உரையாற்றினர்.

 தில்லித் தமிழ்ச் சங்கமும், "தினமணி'யும் இணைந்து நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் பங்கேற்ற ஒரே தமிழ் வலைப்பதிவர் தொகுத்தது.

உதவி :-தினமணி, புதுதில்லி, 16, செப்டம்பர், 2012.


0 comments:

Post a Comment

Kindly post a comment.