Sunday, September 23, 2012

அமெரிக்காவாழ் முதல் ஐந்து இந்தியப் பணக்காரர் பட்டியல் !







 நடப்பு ஆண்டிற்கான 400 அமெரிக்கக் கோடீஸ்வரர்களின் பட்டியலை போர்ப்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்கப் பணக்காரர்கள் வரிசையில் இவர் 239-வது இடத்தில்  உள்ளவர்,     59-வயதுடைய. தேசாய் . இவரது சொத்து மதிப்பு 200 கோடி  டாலர். அமெரிக்காவாழ் இந்தியரில் முதல் பணக்காரர்.

அமெரிக்கப் பணக்காரர் வரிசையில் இவர் 250-வது இடத்தில் உள்ளவர், 65 வயதுடைய ரமேஷ் வத்வானி. இவரது சொத்து மதிப்பு 190 கோடி டாலர். அமெரிக்காவாழ் இந்தியரில் இரண்டாவது பணக்காரர். 

அமெரிக்கப் பணக்காரர் வரிசையில் இவர் 298-வது இடத்தில் உள்ளவர்,  55 வயதுடைய ஸ்ரீராம். இவரது சொத்து மதிப்பு 160 கோடி டாலர். அமெரிக்காவாழ் இந்தியரில் மூன்றாவது பணக்காரர்.   

அமெரிக்கப் பணக்காரர் வரிசையில் இவர் 311-வது இடத்தில் உள்ளவர்,, 59 வயதுடைய  மனோஷ் பார்காவா. இவரது சொத்தின் மதிப்பு 150 கோடி டாலர்..அமெரிக்காவாழ் இந்தியரில் நான்காவது பணக்காரர்.

அமெரிக்கப் பணக்காரர் வரிசையில் இவர் 328-வது இடத்தில் உள்ளவர், 57 வயதுடைய கோஷ்லா. இவரது சொத்தின் மதிப்பு 140 கோடி டாலர். அமெரிக்காவாழ் இந்தியரில் ஐந்தாவது பணக்காரர்..  

அமெரிக்க மைக்ரோ சாப்ட்வேர் கம்பெனி அதிபர் பில்கேட்ஸ், 7300 கோடி டாலர் சொத்துக்குரியவராகி இந்த ஆண்டும் முதலிடம் வகிக்கின்றார்.19 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.   

இரண்டாவது இடத்தில் வருபவர், பெர்க்சர் ஹதாவ் கம்பெனி அதிபர், பப்பெட். இவரது சொத்தின் மதிப்பு 4600 கோடி டாலர்.    

ஆரக்கள் கம்யூட்டர் கம்பெனி அதிபர் லேரி எலிசன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்தின் மதிப்பு 4000 கோடி டாலர்.

 Forbes magazine's annual list












0 comments:

Post a Comment

Kindly post a comment.