முதலாவது பாவம்:-
மழைப் பொழிவு தாறு மாறாக உள்ளது.இதற்குக் காரணம் பசுவநிகை மாற்றமே.சென்ற ஆண்டில் பெய்த மழி காகம் தவறியோ, பரவலாகவோ கொட்டித் தீர்த்துச் செல்கின்றது. மழை வரும் என்று காத்திருந்த விவசாயிகள், வளர்ந்து வந்தபின், அறுவடைஇகு முன் கடுமையான மழை பெய்து விளத்ததை அழிவுறச் செய்கிறது. காலம் தப்பிக் கடும் மழையால் பெறும் தண்ணீரைக் காப்பாற்றிப் பயன்படுத்த் தக்க அமைப்பு இல்லை.
இரண்டாவது பாவம்;-
கட்டப்பட்ட பாசனத்திட்டங்கள், மழை நீர்ச் சேகரிப்புக்கள் பயன்படவில்லை. அரசு உருவாக்கிய நீர்ச் சேமிப்புத் திட்டங்களில் 40 விழுக்காடு பயன்படவில்லையென அரசுக் குறிப்பே சொல்கின்றது. அரசுத் தணிக்கைக் குழுவே கட்டப்பட்ட அணைகளிலும்,வாய்க்கால்களிலும். லஞ்சப்பணமே பெருக்க்கெடுத்து ஓடியுள்ளது என்கிறது. செய்த செலவுக்கும், கிடைத்த நன்மைக்கும் சம்பந்தமே இல்லை. என்கிறது. இது மன்னிக்க முடியாத
இரண்டாவது பாவம்.
மூன்றாவது பாவம்:-
மகாராஷ்டிரத்தில் தண்ணீர் பயன்பாட்டில் தொழில் வளர்ச்சிக்கே முதலிடம். விவசாயத்திற்கு இங்கு இரண்டாம் இடமே. எனினும், விவசாய நாட்டின் பெரிய மாநிலம். பாசன வாய்க்கால்கள் கட்டப்பட்டபோதும். தண்ணீர் முதலில் தொழிற்சாலைகளுக்கே அளிக்கப்பட்டது. மேல் வர்தா பாசனத் திட்டம் பிரதமரின் நிவாரண நிதியால் மேற்கொள்ளப்பட்டது. திட்டம் முடிந்து தண்ணீர் வந்தவுடன், அந்த நிலம் முழுமையாக சோபியா அலை மின் ஆலையின் வேலைக்காகத் திருப்பிவிடப்பட்டது.
விவசாயிகள் கடுமையாகப் போராடினர். இனித் தொழிற்சாகைக்கு முன்னுரிமை இல்லை என்று அறிவித்தது.ஏற்கனவே ஒதுக்கியதை மாற்ர முடியாது என்று நறுத்து விட்டது, அரசு. போராட்டம் தொடர்கிறது.
மகாராஷ்டிரத்தில் ஒட்டுமொத்தத் தண்னீரில் 50 % மட்டுமெ விவசாயத்திற்குப் பயன்படுகின்றது. நகற்ப்புற வஅர்ச்சியாலிது மேலும் குறைய நேரிடும்.நகரங்கதமதி தண்ணீர்த் தேவையை குறைத்துச் சிக்கனமாக வாழமுயற்சிக்குமா? தரப்படும் சுத்தமான நீரைக் கழிவுகளால் நிறைத்து கிராமஙளுக்குத் தரும் நகரங்களின் வளர்ச்சிப்போக்கு மாறுமா? இது மூன்றாவது பெரும் பாவம்!
நான்காவது பாவம்:-
தண்னீர் பயன்பாடு பற்றிய திறமை, ஆற்றல் மிகக் குறைவாக உள்ளது. தண்ணீர் தாகம் கொட கரும்பு சாகுபடியே நீர்ப்பஞ்சம் கொண்ட மராச்சியத்தின் முதனமைப் பயிர்.இங்குதான் நாட்டின் 60% சர்க்கரை உற்பத்தியாகின்றது. கங்கை பாயும், நீரில் மிதக்கும் உத்தரப் பிரதேசம் கூட சர்க்கடை உற்பத்தியில் பின்னால் நிற்கிறது. நீர்ப் பயன்பாடும்.நீர் இருப்பும் சமமற்ற நிலை. பெரும் காரணமாவது நான்காவது பெரும்பாவம்.
ஐந்தாவர்து பெரும் பாவம்:-
நிலத்தடி நீர் மக்கஈன் பயன்பாட்டுக்கான தண்ணீர்த் தேவையைப் பெரிதும் எதிர் கொண்டு உதவுவது. நிலத்தடியிலிருந்து பெரிய பெரிய பம்புகளைப் போட்டு உறிஞ்சி எடுக்கும் நாம், அங்கு பின் எப்படித் தண்ணீர் வரும் என்பதைச் சிந்திப்பதில்லைஉ. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் எதுவும் செய்யப்படுவவதும் இல்லை. இர்ஹு நான்காவது பெரிய பாவம்.
ஆறாவது பெரிய பாவம் :-
நாம் நம் நீர் நிலைகளைக் காக்கவும், மேம்படுத்தவும், மண் வளத்தைக் காக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் செய்யும் முயற்சியும் செலவும் போதாதையாகவும், பொருத்தமற்றவையாகவும் உள்ளன. குளங்கள், ஏரிகள், தூர்எடுத்தல், கசிவு நீர்க் குட்டைகள் அமைத்தல், ஆகிய பணிகள் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் செய்யப்படும் இத்தகைய திட்டங்கள் தரமற்றதாகவும், ப்யனற்ற வேலையாகவுமே உள்ளன.சரியான திட்டமிடல் இல்லை. வேலை தரப்படுகின்றதே தவிரப் பயன் எதுவும் ஏற்படுவதில்லை..
தூர்வாரிய குளங்களில் மரங்கள் நடப்படுகின்றன்.அவற்றைப் பாதுகாத்து வளர்க்க அத்திட்டத்தில் இடமில்லை. இதில் தூர் எடுக்கப்படுகின்றதே தவிர, அவற்றிற்கு நீர் வரும் பாதைகள் அடைந்து போவது பற்றியோ, கட்டிடங்கள் கட்டப்பட்டுத் தடுக்கப்படுவது பற்றியோ கவலையே படுவதில்லை. குளங்கள் நிறையாமல் வீடுகள் மிதப்பதையும் பார்க்கின்றோம். இது ஆறாது பெரும்பாவம்.
வறட்சி ஒரு மாற்ற முடியாத் விதியின் விளயாட்டல்ல. ஏதோ மனித குலத்தைத் தண்டிக்கத் தரும் சாபமுமல்ல .இது அப்பட்டமான மனிதத் தவறுகளால் , நீரையும், நிலத்தையும் மதிக்காத மனித அலட்சியத்தால், ஆணவத்தால் நடப்பவையே . விஞ்ஞானம் பெரிதும் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் இது தொடர்கிறது. மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே போகிறது ஏன்?
மத்திய அரசு மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் கிட்டம் கொண்டுய் வந்தவுடன், மாநில அரசு தனது திட்டத்தைத் தேவையற்றது என்று விட்டு விட்டது.
இயற்கை தரும் மழையின் அளவு குறையவில்லை. ஆனால் சேமிக்கத் தவறியுள்ளோம் !
திட்டமிடுகின்றோம். திட்டத்தைத் தின்று ஊழல் வளர்கிறது.!
ஒவ்வொரு ஊரிலும் பெய்யும் மழைநீரை அங்கேயே சேமிக்கும் உணர்வு மக்களிடம் இல்லை.
இயற்கை தருகிறது. நாம் வீணடித்து வாடுகின்றோம்; நாம் மாறினால் வறட்சி மறையும்; வளம் பெருகும்..
நன்றி:- அ.நாராயணன் , ஆசிரியர் ,பாடம், தொடர்பு எண் :- 98403 03581
தமிழாக்கம் : மருத்துவர் ஜீவா.
டவுன் டு எர்த், 31-05-1012 சுனிதா நாராயணன்
தலையங்கத்தின் மொழிபெயர்ப்பு.
0 comments:
Post a Comment
Kindly post a comment.